கர்நாடகாவில் இலவச அரிசிக்குப் பதில் பணம். வாக்குறுதியை நிறைவேற்ற மாற்று வழி!

கர்நாடகாவில் இலவச அரிசிக்குப் பதில் பணம். வாக்குறுதியை நிறைவேற்ற மாற்று வழி!

தேர்தல் நேரத்தில் பலவிதமான வாக்குறுதிகளை அரசியல் கட்சிகள் அள்ளி இறைப்பது வழக்கம். அதில் சில வாக்குறுதிகள் அவர்கள் ஆட்சிக்கு வந்ததும் அப்படியே காற்றில் பறப்பதும் உண்டு. இது வாடிக்கை என்பதால் மக்களும் அப்போதெல்லாம் கண்டுகொள்ளாமல் இருந்தனர். ஆனால் இப்போது அப்படி அல்ல. புத்திசாலிகளாக கொடுத்த வாக்குறுதிக்கு என்ன பதில் என்று நேரடியாகவே கேட்கும் துணிவுடன் உள்ளனர். ஆகவே, அரசியல்வாதிகளும் தங்கள் ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் முனைப்பாக உள்ளனர். சமீபத்தில் நடந்த தேர்தலில் சொன்ன வாக்குறுதியை  மாற்று வழியில் மக்களுக்கு தருவதாக கூறும் கர்நாடகாவின் முதல்வரைப் போல. ஆம். அரிசிக்குப் பதில் அதற்கு ஈடான பணத்தை வாங்கிகோங்க என்கிறார்.

இலவச அரிசி திட்டத்திற்கு ஒன்றிய அரசு ஒத்துழைப்பு தராததால் அரிசிக்கு பதில் பணமாக வழங்கப்படும் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்தார். தேர்தலின்போது அளித்த வாக்குறுதியான இலவச அரிசி திட்டம் குறித்து முதல்வர் சித்த ராமையா தலைமையில் அமைச்சரவை கூட்டம் நேற்று நடந்தது இதில் உணவுப் பொருள் வழங்கல் அமைச்சர் கே எச் முனியப்பா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

   செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் முனியப்பா “ஒன்றிய அரசு அளித்து வரும் ஐந்து கிலோ அரிசியுடன் மாநில அரசு ஐந்து கிலோ அரிசி வழங்க தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்திருந்தோம். அதற்காக தேசிய உணவு பாதுகாப்புக் கழகத்தை அணுகி அரிசி கொள்முதல் செய்ய விண்ணப்பித்தோம். ஆனால் இறுதி நேரத்தில் அவர்கள் மாநிலத்திற்கு அரிசி தர மறுத்து விட்டனர். அரிசி விளையும் மாநிலங்களில் கொள்முதல் விலை அதிகமாக இருந்தது இதற்கிடையே இந்த திட்டத்தை ஜூலை 1 முதல் தொடங்க அரசு முடிவு செய்தது அரிசி கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கைகள் முடியும் வரை இலவச அரிசிக்கு பதிலாக பணமாக வழங்கலாம் என்று முதல்வர் சித்த ராமையா துணை முதல்வர் டி கே சிவக்குமார் முன்னிலையில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒரு நபர் இருக்கும் பிபிஎல் கார்டுக்கு ஐந்து கிலோ அரிசிக்கு பதில் ரூபாய் 170ம், இரண்டு  நபர் உள்ள கார்டுக்கு ரூபாய் 340 ம், 5 நபர் இருக்கும் கார்டுக்கு ரூபாய் 850ம்  பணமாக வழங்கப்படும் இந்த பணம் பயனாளர்கள் வங்கி கணக்கில் டெபாசிட் செய்யப்படும்” என்றார்.

எப்படியோ சொன்ன சொல்லைக் காப்பாற்றிய அரசு என்ற பெயர் கர்நாடக மக்களிடையே அரசுக்கு கிடைத்தால் சரி.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com