கள்ளக்குறிச்சி ஸ்ரீமதி பெற்றோர் மீது சிபிசிஐடி குற்றச்சாட்டு..

Srimathi
Srimathi

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி கடந்த ஜூலை 13ஆம் தேதி அதிகாலை விடுதி வளாகத்தில் சடலமாக கிடந்ததை அடுத்து, மாவட்ட அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் ஸ்ரீமதியின் பெற்றோருக்கும் தகவல் அளிக்கப்பட்டது. அதை தொடர்ந்து கனியாமூர் தனியார் பள்ளியில் கலவரமும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக சின்னசேலம் காவல் நிலையத்தில் சந்தேக மரணம் என்று வழக்கு பதிவானது. இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கின் விசரணையின்போது, மாணவி இறப்பில் சந்தேகம் உள்ளதாகவும், சிபிசிஐடி விசாரணை சரியில்லை என்றும் ஸ்ரீமதியின் தாய் தொடர்ந்து குற்றச் சாட்டுக்களை கூறிவந்தார்.

இந்த வழக்கு தற்போது மீண்டும் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு ஏற்கனவே சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டு, விசாரணை நடைபெற்று வருவதால் இந்த வழக்கை ஏன் முடித்து வைக்க கூடாது என்று நீதிபதி மனுதாரர் தரப்பில் கேள்வி எழுப்பினார்.

Srimathi
Srimathi

காவல் நிலைய விசாரணை மட்டுமல்லாமல், சிபிசிஐடி விசாரணை, சிறப்பு புலனாய்வு குழு விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது.

அதை தற்போது வரை நீதிமன்றமும் கண்காணித்து வருகிறது.

பிரேத பரிசோதனை தொடர்பாக அறிக்கைகள் இதுவரை தங்களுக்கு வழங்கப்படவில்லை. எனவே அதை வழங்கும் வரை இந்த வழக்கை முடித்து வைக்க கூடாது என்று ஸ்ரீமதியின் தாய் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

அப்பொழுது சிபிசிஐடி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மாணவியின் பெற்றோர்களான தாய், தந்தை இருவரும் விசாரணைக்கு போதிய ஒத்துழைப்பை வழங்கவில்லை என்றும் டிஎன்ஏ பரிசோதனைக்கு தேவையான மாதிரிகளை வழங்க மறுக்கிறார்கள் என்றும் சிபிசிஐடி தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com