சிபிஐ என்மேல் வழக்கு பதியவில்லை: முன்னாள் ஐஜி பொன்மாணிக்கவேல்!

ஐஜி பொன்மாணிக்கவேல்
ஐஜி பொன்மாணிக்கவேல்
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

சிபிஐ போலீசார் என் மீது வழக்கு பதிவு செய்திருப்பதாக அரவி வரும் செய்திகள் அனைத்தும் போலியானவை.. அப்படி என்மேல் எந்த வழக்கும் பதியப்படவில்லை.. நான் குற்றவாளியில்லை என சிலை கடத்தல் தடுப்பு பிரிவு முன்னாள் ஐஜி பொன்மாணிக்கவேல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சென்னை மயிலாப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் ஐஜி பொன்மாணிக்கவேல் தெரிவித்ததாவது:

சர்வதேச சிலை கடத்தல் மன்னனான சுபாஷ் கபூர் மற்றும் தீன தயாளனை நான் தப்ப வைக்க முயன்றதாக என் மீது சுமத்தப்படும் புகார் மிகவும் அபத்தமானது. மேலும் இந்த வழக்கு விவகாரம் குறித்து சிபிஐ தாக்கல் செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில் (எஃப்ஐஆர்) குற்றவாளி பட்டியலில் என்னுடைய பெயர் இல்லை.

அப்படி என் மீது வழக்கு பதிவு செய்ததாக வந்த செய்திகள் அனைத்தும் ஒரு லட்சம் மடங்கு பொய் ஆகும்" என்று பொன்மாணிக்கவேல் தெரிவித்தார். 

logo
Kalki Online
kalkionline.com