சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு வெளியானது!

சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு வெளியானது!

மத்திய இடை நிலைக் கல்வி வாரியத்தின் சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு தற்போது வெளியாகி உள்ளது.

சி பிஎஸ் இ இந்த ஆண்டு 12-ஆம் வகுப்புத் தேர்வு பிப்ரவரி 15ம் தேதி தொடங்கி ஏப்ரல் 5ம் தேதி வரை நடத்தப் பட்டன. இந்த 12ம் வகுப்பு பொதுத் தேர்வை நாடு முழுவதும் சுமார் 16.9 லட்சம் மாணவ மாணவியர்கள் எழுதினர்.

இந்த நிலையில், நாடு முழுவதும் சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு இன்று வெளியானது. தேர்வு முடிவுகளை மாணவர்கள் https://results.cbse.nic.in/  , மற்றும் cbse.nic.incbse.gov.in ஆகிய இணைய தளங்களில் பார்க்கலாம். கூடுதலாக, பள்ளி மாணவர்களின் கைபேசி எண்ணுக்கு குறுஞ் செய்தி வழியாக தேர்வு முடிவுகள் அனுப்பப் படும்.

சிபிஎஸ்இ தேர்வில் நடப்பாண்டு தேர்ச்சி சதவீதம் 87.33% என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. ஆனால் கடந்த ஆண்டு தேர்ச்சி சதவீதத்தை (92.71 %) ஒப்பிடுகையில் இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் குறைவாக இருப்பது தெரிகிறது.

நாடு முழுவதும் சி.பி.எஸ்.இ 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் 87.33% மாணவ, மாணவிகள் பெற்றுள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது. இதில், தேர்ச்சி விகிதத்தில் முதலிடத்தில் திருவனந்தபுரம் 99.91%, இரண்டாவது இடத்தில் பெங்களூரு 98.64% மற்றும் மூன்றாவது சென்னை 97.40% பெற்றுள்ளனர். 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவில் யார் முதலிடம், இரண்டாவது மற்றும் மூன்றாவது இடம் என்பதை மத்திய இடை நிலைக் கல்வி வாரியம் அறிவிக்கவில்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com