

நடைமுறையில் உள்ள கல்விக் கொள்கையின்படி மாணவர்கள் இரண்டு மொழிகளை மட்டுமே கற்று வருகின்றனர். தற்போது வெளியிடப்பட்டுள்ள புதிய தேசிய கல்விக் கொள்கையின்(NEP) படி , நடப்பு 2026-27 கல்வியாண்டு முதல் 6-ஆம் வகுப்பில் மூன்றாவது மொழி கற்பது கட்டாயமாக்கப்படுகிறது.
புதிய கல்விக் கொள்கை, மாணவர்களை குறைந்தபட்சம் இரண்டு இந்திய மொழிகளை யாவது கற்றுக் கொள்ள வேண்டும் என்று நடைமுறைப்படுத்த உள்ளது. 2031-ஆம் ஆண்டு 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறும் போது மாணவர்கள் ஆங்கிலத்துடன் , இரண்டு இந்திய மொழிப் பாடங்களுக்கும் சேர்த்து தேர்வு எழுத வேண்டி இருக்கும்.
நடப்பு கல்வியாண்டிலிருந்து 9 ஆம் வகுப்பில் டோக்ரி, மைதிலி, கொங்கணி மற்றும் சந்தாலி ஆகிய மொழிகளை பாடங்களாக சிபிஎஸ்இ கல்வி வாரியம் வழங்க உள்ளது. இதன் விருப்ப மொழிப்பாடங்களில் மொத்தமாக 22 மொழிகள் அட்டவணையில் உள்ளன.
மொழிகள் மட்டுமின்றி, கலை, தொழிற்கல்வி மற்றும் உடற்கல்வி ஆகியவையும் 9 மற்றும் 10-ஆம் வகுப்புகளுக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ளன. மேலும், செயற்கை நுண்ணறிவு மற்றும் கணினி சிந்தனை சார்ந்த பாடங்கள் 2029- முதல் பொதுத்தேர்வில் இடம்பெறும்.
கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களில் மாணவர்கள் தங்கள் திறமைக்கேற்ப 'அட்வான்ஸ்டு' முறையை தேர்வு செய்யும் வசதியும் அறிமுகமாகிறது. இந்த மாற்றங்கள் மாணவர்களின் பன்மொழித் திறன் மற்றும் தொழில்நுட்ப அறிவை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளன.
சிபிஎஸ்இ-யின் இந்த புதிய பாடத்திட்ட வரைவு 2031-க்குள் முழுமையாக நடைமுறைக்கு வரும்.