காசாவில் போர் நிறுத்தம்: ஐநா தீர்மானம்!

UN
UN

ஸ்ரேல் பாலஸ்தீனம் போரை நிறுத்தி, காசாவின் மீதான தாக்குதலை முடிவுக்கு கொண்டுவர ஐநா சபையில் தீர்மானம் நிறைவேற்றம்.

இஸ்ரேல் பாலஸ்தீனம் இடையே நடைபெற்று வரும் போர் உலகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது. காஸாவில் பொதுமக்கள், குழந்தைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பந்தமான வீடியோ, புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் ஐநா சபையில் பாலஸ்தீன பிரதிநிதி போரை முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அதே நேரம் இஸ்ரேல் பிரதிநிதி இஸ்ரேல் படைகள் ஹமாஸ் அமைப்பினர் மீது மட்டுமே தாக்குதல் நடத்தி வருவதாக தெரிவித்தார்.

இந்த நிலையில் அரபு நாடுகளின் கூட்டமைப்பின் சார்பில் ஐநா சபையில் பாலஸ்தீன மீதான இஸ்ரேலுடைய தாக்குதலை நிறுத்த வேண்டும். இரு நாடுகளும் போரை முடிவுக்கு கொண்டு வர ஒத்துழைக்க வேண்டும் என்று தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

193 உறுப்பினர்கள் கொண்ட ஐநா சபையின் கூட்டத்தில் 120 நாடுகள் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர். 14 நாடுகள் தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தன. 45 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் தீர்மானத்தின் பங்கேற்காமல் புறக்கணித்தனர்.

ஐநா சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை அடுத்து, மனிதாபிமான அடிப்படையில் போரை உடனடியாக முடிவுக்கு கொண்டுவர இரு நாடுகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. மேலும் அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்வதில் இருக்கும் தடையை நீக்கவும், மருத்துவத் தேவைகளை உடனுக்குடன் பூர்த்தி செய்யவும் ஒத்துழைக்க வேண்டும். சிறைபிடிக்கப்பட்ட நபர்களை நிபந்தனையின்றி விடிவிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மேலும் இதுவரை 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் காசாவில் மட்டும் 7326 பேர் கொல்லப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com