மக்களுக்கு அடுத்த ஷாக்..! நாளை முதல் சிமெண்ட் மூட்டை, இரும்பு கம்பி விலை உயர்கிறது..!

Cement prices rising
Cement prices risingimage credit-simbacementkenya.com
Updated on

ஏப்ரல் 1, 2026 (நாளை) முதல் சிமெண்ட் மூட்டை மற்றும் இரும்பு கம்பிகளின் விலைகள் உயர்கிறது. சிமெண்ட் மூட்டைக்கு ரூ.70 வரையிலும், இரும்பு டன்னுக்கு ரூ.2,000 வரையிலும் உயர்வு என உற்பத்தி நிறுவனங்கள் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் விநியோகச் சங்கிலி பாதிப்புகள் காரணமாக, இந்தியாவில் நாளை(ஏப்ரல் 1) முதல் சிமெண்ட் மட்டும் இரும்பு கம்பிகளின் விலை உயரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கட்டுமானப் பணிகள் மற்றும் சொந்த வீடு கட்டுபவர்களின் கனவு பாதிக்கப்படும் எனவும் விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கச்சா எண்ணெய் மற்றும் பேக்கேஜிங்(PP bags) விலை உயர்வால், சிமெண்ட் உற்பத்திச் செலவு அதிகரித்துள்ளது. இரும்புத்தாது மற்றும் மூலப் பொருட்களின் விலையேற்றத்தால் இரும்பு கம்பிகளின் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த விலை உயர்வால் கட்டுமான செலவுகள் அதிகரித்து, வீடு கட்டுபவர்களுக்கு கூடுதல் சுமை ஏற்படும். இதற்கு முக்கிய காரணமாக ஈரான்-மேற்கு ஆசிய போர் சூழல், கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் பேக்கேஜிங் செலவுகள் அதிகரிப்பு போன்றவையே காரணம் என்று கூறப்படுகிறது. கட்டுமானப் பொருட்களின் திடீர் விலையேற்றத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்று கட்டுமான சங்கங்கள் கோரிக்கை விடுத்து வருகின்றன.

மேற்கு ஆசியாவில் நிலவும் போரின் காரணமாக எரிபொருள் மற்றும் பேக்கேஜிங் செலவுகளால் ஏற்பட்ட பெரும் உயர்வை ஈடு செய்வதற்காக இந்தியாவின் முன்னணி சிமெண்ட் நிறுவனங்கள் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் விலையை உயர்த்தியுள்ளன. இந்த விலை உயர்வுகள் லாப வரம்புகளை பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தாலும், அவை கட்டுமான செலவுகளை அதிகரிக்கும் அபாயத்தை ஏற்படுத்துகின்றன. சிமெண்ட் பைகள் தயாரிக்கப் பயன்படும் மூலப்பொருட்களின் உற்பத்தி செலவுகள் அதிகரித்துள்ளதால் சிமெண்ட் துறையில் கடுமையான விலை உயர்வு ஏற்படுகிறது. சந்தையில் முன்னணியில் உள்ள நிறுவனங்கள் இந்த விலை உயர்வை அமல் படுத்துகின்றன.

இதையும் படியுங்கள்:
உங்க தாத்தா பாட்டியை டூர் கூட்டிட்டு போக பிளானா? எந்த டென்ஷனும் இல்லாத இந்த டாப் 5 இடங்கள் இதோ!
Cement prices rising
logo
Kalki Online
kalkionline.com