காவிரி – கோதாவரி இணைப்புக்கு மத்திய அரசு பச்சைக்கொடி!

காவிரி
காவிரி

நாட்டின் ஜீவ நதிகளான கங்கை, பிரம்மபுத்திரா, கோதாவரி, கிருஷ்ணா, பெண்ணாறு, காவிரி உட்பட பல்வேறு நதிகளை ஒன்றாக இணைக்க மத்திய அரசு முயற்சிகள் மேற்கொண்டுள்ளது. அந்த வகையில் காவிரியையும் கோதாவரியையும் இணைக்கும்  கோரிக்கைக்கு மத்திய அரசு பச்சைக்கொடி காட்டியுள்ளது.

இந்நிலையில் கோதாவரி - காவிரி இணைப்பு திட்டத்தை செயல்படுத்தும் வகையில்  மகாராஷ்டிரா, சத்திஸ்கர் மாநில எல்லையில் இருந்து 1,465 கிலோமீட்டர் தொலைவிற்கு கால்வாய் அமைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

இந்த கால்வாய் தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ள கல்லணையுடன் காவிரியில் இணைக்க திட்டமிடப்பட்டது. அதற்காக மத்திய அரசு 60 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும் என திட்டமிட்டது.

இதில் 54 ஆயிரம் கோடி ரூபாய் மத்திய அரசு வழங்கும். இந்த திட்டத்தை செயல்படுத்த மகாராஷ்டிரா, சட்டீஸ்கர், ஒடிசா, தெலுங்கானா, தமிழகம், ஆந்திரா மாநிலங்களின் அனுமதி அவசியம்.

இந்த திட்டம் குறித்தான விரிவான அறிக்கை மத்திய அரசிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் சமீபத்தில் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. அதில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், துறை செயலாளர் சந்திப் சக்சேனா, காவிரி தொழில்நுட்ப பிரிவு தலைவர் சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில்  காவிரி - கோதாவரி இணைப்பு கால்வாயை கரூர் கட்டளை கதவணை அருகே இணைக்க வேண்டும் என்றும், அந்த கால்வாயின் உயரம் 50 மீட்டராக இருக்க வேண்டும் எனவும்  தமிழக அரசு கோரிக்கை வைத்தது.

தமிழக அரசின் இந்த கோரிக்கையை பரிசளிப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர். இந்த நிலையில் நதிநீர் இணைப்பு செயல்படுத்த மகாராஷ்டிரா, சட்டீஸ்கர், ஒரிசா, தெலுங்கானா, ஆந்திரா மாநிலங்களில் ஒப்புதல் பெறுவதற்கான முயற்சியில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com