விமானப் பயணிகளுக்கு 'டிஜி யாத்ரா' செயலி: மத்திய அரசு அறிமுகம்!

விமானப் பயணிகள்
விமானப் பயணிகள்
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

விமானப் பயணிகளுக்கான 'டிஜி யாத்ரா' செயலியை மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா அறிமுகப் படுத்தினார்.

விமானத்தில் பயணம் செய்வோருக்கு அப்பயணத்தை எளிதாக்கும் வகையில் மத்திய அரசால் 'டிஜி யாத்ரா' என்ற செயலி அறிமுகப் படுத்தப் பட்டுள்ளது.  இந்த செயலி மூலம் பயணிகளை அடையாளம் கொண்டு அனுமதிக்க வழிவகை செய்யப்படுகிறது.

இத்திட்டத்தை நேற்று டெல்லி விமான நிலையத்தில் மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா அறிமுகப்படுத்தினார். மேலும் பெங்களூரு, வாரணாசி விமான நிலையங்களிலும் விரைவில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என அவர் தெரிவித்தார்.

விமான நிலையங்களில் காகித பயன்பாட்டை குறைக்கவும் பயணிகளின் நேரத்தை மிச்சப்படுத்தவும் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்படுவதாக மத்திய அமைச்சர் கூறினார்.

logo
Kalki Online
kalkionline.com