மத்திய அரசின் அறிவிப்பினால் மின்கட்டணம் மீண்டும் உயருமா? பொதுமக்கள் அச்சம்!

மத்திய அரசின் அறிவிப்பினால்  மின்கட்டணம் மீண்டும் உயருமா? பொதுமக்கள் அச்சம்!

ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தியதும் புதிய மின்சார கட்டண கணக்கீடு அமலுக்கு வரும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது

நேர அடிப்படையில் மின் கட்டண நிர்ணயம் என்ற மத்திய அரசின் அறிவிப்பு மின்கட்டணம் மீண்டும் உயருமோ என்ற அச்சத்தை மக்களிடையே விதைத்துள்ளது.

"பகலில் மின் கட்டணம் 20 சதவீதம் குறைவாக இருக்கும். மின்கட்டணம் உச்சமாக இருக்கும் நேரத்தில் 10 முதல் 20 சதவீதம் வரை கட்டணம்கூடுதலாக இருக்கும். நேர அடிப்படையில் மின் கட்டணத்தை சரியாகபயன்படுத்திக் கொள்ளும் நுகர்வோர் பலன் பெறுவார்கள்" என்று அந்த அறிவிப்புகூறுகிறது.

மின்சார நுகர்வோர் உரிமை கொள்கை 2020 - இல் சில திருத்தங்களை மத்திய அரசு அறிவித்துள்ளது. கடந்த 23-ம் தேதியிட்ட அறிவிப்பு, 'நேர அடிப்படையில்மின்சார கட்டணம் கணக்கிடப்படும், ஸ்மார்ட் மீட்டர் விதிகள் எளிமையாக்கப்படும்' என்று கூறுகிறது.

EB

.இதன் மூலம் மின்சார கட்டணத்தை குறைத்து கொள்ளும் வகையில் மக்கள் தங்களது மின்சார பயன்பாட்டை மக்கள் திட்டமிட்டுக் கொள்ள முடியும் என்று மத்திய அமைச்சர் கூறுகிறார்.

ஆனால், மத்திய அரசின் அறிவிப்பு மின் கட்டணம் உயர வழிவகுக்கும் என்று எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன. அத்துடன், நாடு முழுவதும் அனைத்து வீடுகளுக்கும் ஸ்மார்ட் மீட்டர் கட்டாயம் என்ற அறிவிப்பும் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

விவசாயம் அல்லாத மற்ற வீடு, அலுவலகம் உள்ளிட்ட அனைத்து நுகர்வோருக்கும் 2025-ம் ஆண்டு ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் புதிய மின் கட்டண முறை அமலுக்குவருகிறது. ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்டதுமே, அந்த மின் இணைப்பில் புதிய கட்டண முறை செயல்பாட்டுக்கு வந்துவிடும் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. 10 கிலோவாட்டிற்கும் அதிகமான மின் தேவை இருக்கும் வணிக மற்றும் தொழில்துறை நுகர்வோருக்கு அடுத்த ஆண்டு ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் நேர அடிப்படையில் மின் கட்டணம் அமலுக்கு வரும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com