மத்திய பல்கலைக்கழகங்கள்: ஓபிசி பணியாளர்களின் எண்ணிக்கை குறைவு!

சுபாஷ் சர்க்கார்
சுபாஷ் சர்க்கார்
Updated on

த்திய பல்கலைக்கழகங்களில் பணியாற்றக் கூடிய ஓ பி சி வகுப்பைச் சேர்ந்த பணியாளர்களின் எண்ணிக்கை குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு ஒன்றிய அமைச்சர் சுபாஷ் சர்க்கார் அளித்துள்ள பதில்.

மத்திய அரசின் கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் நியமனங்களில் பின்பற்றப்படும் ஓ பி சி பிரிவினருக்கான இட ஒதுக்கீடு முறை குறித்தும், பணியில் உள்ள பணியாளர்களின் சமூகப் பிரிவுகள் குறித்தும், நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு ஒன்றிய அமைச்சர் சுபாஷ் சர்க்கார் பதிலளித்துள்ளார்.

அமைச்சரின் பதிலில், இந்தியாவில் 45 மத்திய பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் பணியாற்றும் 5 பல்கலைக்கழக துணைவேந்தர்கள் ஓ பி சி பிரிவை சேர்ந்தவர்கள். மேலும் பல்கலைக்கழகங்களில் 1,341 பேராசிரியர் பணியிடங்கள் உள்ளன. அவற்றில் பொது பிரிவை சேர்ந்த 1,146 நபர்களும், பட்டியல் பிரிவான எஸ்.சி வகுப்பைச் சேர்ந்த 96 பேராசிரியர்களும், எஸ்டி பிரிவை சேர்ந்த 22 பேராசிரியர்களும், ஓபிசி பிரிவை சேர்ந்த 60 பேரும், இ. டபிள்யு.எஸ் என்ற பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் பிரிவை சேர்ந்த பேராசிரியர் 3 பேர் மற்றும் மாற்றுத் திறனாளி பேராசிரியர்கள் 14 பேர் பணியில் உள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார்.

இணை பேராசிரியர் பொருத்தவரை மொத்தம் 2,817 பேர் பணியாற்றி வருவதாகவும், அதில் பொது பிரிவை சேர்ந்தவர்கள் 234 பேர், பட்டியல் வகுப்பைச் சேர்ந்த எஸ்சி வகுப்பைச் சேர்ந்த 231 பேர், எஸ்டி வகுப்பைச் சேர்ந்த 69 பேர், ஓபிசி வகுப்பைச் சார்ந்த 157 பேர், இ.டபுள்யு.எஸ் என்ற பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பைச் சேர்ந்த ஏழைகள் 7 பேர், மாற்றுத்திறனாளிகள் 19 நபர்கள் என்ற எண்ணிக்கையில் பணியாற்றி வருவதாகவும்.

உதவி பேராசிரியர்களின் எண்ணிக்கை மொத்தம் 13 ஆயிரத்து 998 என்றும், அதில் பொது பிரிவை சேர்ந்த 8734 பேரும், பட்டியல் வகுப்பை சேர்ந்த எஸ்சி பிரிவை சேர்ந்த 1421 பேரும், எஸ்டி வகுப்பைச் சேர்ந்த 625 பேரும், ஓபிசி வகுப்பைச் சேர்ந்த 1901 பேரும், பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் சாதி ஏழைகள் 192 பேரும், மாற்றுத்திறனாளிகள் 225 நபர்களும் பணியில் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் பல்கலைக்கழகங்களில் ஆசிரியர்கள் இல்லாத ஊழியர்களாக பணியாற்றுபவர்களில் ஓபிசி வகுப்பைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை 18 சதவீதம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

logo
Kalki Online
kalkionline.com