தமிழகத்தில் தொடர்ந்து 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு!

தமிழகத்தில் தொடர்ந்து 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு!
Updated on

தமிழகம், புதுச்சேரி, மற்றும் காரைக்கால் பகுதியில் 24ந் தேதி முதல் 26ந் தேதி வரை வறண்ட வானிலை காணப்படும் நிலையில், தென் தமிழக கடலோர பகுதிகளில் 27, 28 ஆகிய 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில், லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தென் தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் வருகின்ற 27ந்தேதி மற்றும் 28ந்தேதி ஆகிய இரு நாட்களிலும் ஓரிரு இடங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் அதைசுற்றியுள்ள புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்சமாக 33 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், குறைந்தபட்சமாக 22 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையையும் ஒட்டி இருக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

logo
Kalki Online
kalkionline.com