நிலா, பூமியை அழகாக படம்பிடித்த சந்திரயான் 3!

மாதிரி படம்
மாதிரி படம்Intel
Updated on

ந்திரயான்-3 விண்கலம் எடுத்த பூமி மற்றும் நிலவின் 2 புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

சந்திரனை ஆய்வுசெய்வதற்காக ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து கடந்த மாதம் 14-ஆம் தேதி செலுத்தப்பட்ட சந்திரயான்-3 விண்கலம், சந்திரன் வட்டப் பாதைக்குள் கடந்த 5-ஆம் தேதி நுழைந்தது. 

இதனைத் தொடர்ந்து, மூன்றாவது கட்டமாக சந்திரனில் வட்டப் பாதையின் உயரம், புதன்கிழமை குறைக்கப்பட்டது. தற்போது குறைந்தபட்சம் 174 கி.மீ.தூரமும், அதிகபட்சம் 1,437 கி.மீ.தூரமும் கொண்ட நிலவு வட்டசுற்றுப்பாதையில் சந்திரயான் விண்கலம் வலம்வருகிறது. இந்நிலையில், சந்திரயான்-3 விண்கலம் எடுத்த பூமி மற்றும் நிலவின் 2 புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

அதாவது, நிலவில் தரையிறங்கக்கூடிய லேண்டரில் உள்ள எல்எச்விசி எனும் கிடைமட்ட கேமரா மூலம் நிலவின் புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இப்படங்கள் துல்லியமாக இருப்பதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் உற்சாகத்துடன் கூறினர்.

அதில் 120 கி.மீ. விட்டம் கொண்ட பிதாகரஸ் பள்ளம், எரிமலைகளால் ஏற்பட்ட ஓசியானஸ் புரோசெல்லாரம், அரிஸ்டார்கஸ் பள்ளம், ராமன் பள்ளத்தாக்கு என நிலவின் மேற்பரப்பை தெளிவாக காணமுடிகிறது.

இந்த இரண்டு படங்களையும் இஸ்ரோ வியாழக்கிழமை வெளியிட்டுள்ளது. சந்திரயான்-3 விண்கலத்தின் அடுத்தகட்ட வட்டப் பாதை குறைப்பு நடவடிக்கையை, வரும் 14-ஆம் தேதி நண்பகலில் மேற்கொள்ள உள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. மேலும், வரும் 23-ஆம் தேதி சந்திரனின் தென்துருவத்தில் விண்கலத்தை தரையிறக்க இஸ்ரோ திட்டமிடப்பட்டுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com