வெற்றிகரமாக விண்ணில் சீறிப்பாய்ந்த சந்திராயன் 3 விண்கலம்: 10 நிலைகளைக் கடந்தால் வெற்றி உறுதி!

 ராக்கெட்
ராக்கெட்

நான்கு ஆண்டு உழைப்பின் பலனாக, ஒட்டுமொத்த இந்தியர்களின் கனவுகளை சுமந்து உருவாக்கப்பட்ட சந்திரயான் 3 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இந்த விண்கலம் வெற்றிகரமாக நிலவில் தரை இறங்குவதற்கு எத்தனை நிலைகள் இருக்கிறது என்பது பற்றி இந்தப் பதிவில் காணலாம். 

நிலவில் சந்திரயான் 3 வெற்றிகரமாக தரை இயங்குவதற்கு மொத்தம் 10 நிலைகள் இருக்கிறது. அந்த பத்து நிலைகளையும் வெற்றிகரமாக கடந்தால் மட்டுமே சந்திரயான் 3 விண்கலம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். 

நிலை 1: ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட்டின் உதவியுடன் பூமியிலிருந்து சுமார் 170 கிலோமீட்டர் தூரத்தில் விண்கலத்தை நிலைநிறுத்துவதுதான் முதல் கட்டம். 

நிலை 2: 170 கிலோமீட்டர் தூரத்தில் நிலைநிறுத்தப் பட்டதும், அங்கிருந்து ஒரு விசை கொடுக்கப்பட்டு, பூமியை நீள்வட்டப் பாதையில் சுற்றும் படி செய்வார்கள். அந்த சமயத்தில் பூமிக்கு அருகே விண்கலம் இருக்கும்போது 170 கிலோமீட்டர் தூரத்திலும், பூமியை விட்டு விலகிச் செல்லும்போது 36,500 கிலோ மீட்டர் தூரத்திலும் இருக்கும்படி பயணிக்க வேண்டும். 

நிலை 3: பூமியிலிருந்து 36500 கிலோமீட்டர் தூரத்தை ஏட்டுவதற்கு, ஒரேயடியாக விண்கலத்தை அவ்வளவு தூரம் இயக்குவது கடினமாகும். அதற்கு அதிக எரிபொருள் செலவாகும் என்பதால், ஆர்பிட்டல் ரைசிங் என்ற முறையைப் பின்பற்றி கொஞ்சம் கொஞ்சமாக குறிப்பிட்ட தூரம் எட்டும்வரை மீண்டும் மீண்டும் பூமியை விண்கலம் சுற்றிக் கொண்டே இருக்கும். 

நிலை 4: நான்காவது நிலை மிகவும் சுவாரசியமானது. பூமிக்கும் புவியீர்ப்பு சக்தி இருக்கிறது நிலவுக்கும் புவியீர்ப்பு சக்தி இருக்கிறது. இந்த இரண்டுக்கும் இடையே ஒரு இடத்தில் இரண்டு விசைகளும் சந்திக்கும் மையப்புள்ளி இருக்கும். அங்கு கொண்டு போய் விண்கலத்தை நிலை நிறுத்துவது தான் நான்காவது கட்டமாகும். இந்த மையப்புள்ளி நிலவிலிருந்து சுமார் 62,630 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது. 

நிலை 5: இந்த நிலையில், விண்கலத்தின் பாதை நிலவில் சரியான இடத்தில் தரையிறங்குவதற்கு ஏற்ப சரி செய்யப்படும். 

நிலை 6: பாதை சரி செய்யப்பட்ட பிறகு, விண்கலத்திற்கு உந்துவிசை கொடுக்கப்பட்டு பூமியின் புவியீர்ப்பு விசையிலிருந்து நிலவின் புவியீர்ப்பு விசைக்கு கொண்டு செல்லப்படும்.

நிலை 7: இந்த நிலையில் விண்கலம் எப்படி பூமியை நீள்வட்ட பாதையில் சுற்றி வந்ததோ, அதேபோல நிலவை நீள்வட்டப் பாதையில் சுற்றவைக்க வேண்டும். அப்போதுதான், நிலவில் சரியான இடத்தில் தரையிறக்க முடியும். இல்லையேல் வழி மாறி விண்கலம் விண்வெளிக்கு சென்றுவிட வாய்ப்புள்ளது. 

நிலை 8: இதில், இதுவரை விண்கலத்தை உந்திக் கொண்டுச்சென்ற புரொபஷனல் மாடுல் தனியாகப் பிரிக்கப்பட்டு. நிலவில் தரையிறங்கப்போகும் லாண்டர் பகுதி, நிலவிலிருந்து சுமார் 100 கிலோமீட்டர் தூரத்தில் நிலைநிறுத்தப்படும். 

நிலை 9: இதுதான் மிகவும் முக்கியமான மற்றும் கடினமான கட்டமும் கூட. அதாவது லாண்டர் பகுதி தரை இறங்குவது. இதற்கு முன்பு அனுப்பிய சந்திரயான் 2 விண்கலம் இந்த நிலையில் தான் தோல்வியடைந்தது. இது சரியாக நடந்துவிட்டால் 99.9% விண்கலத்தின் வெற்றியை உறுதி செய்துவிடலாம். 

நிலை 10 : லாண்டர் பகுதி தரை இறங்கியதும், அதன் உள்ளே இருக்கும் ரோவர் எனப்படும் ஆய்வு ஊர்தி வெளியே வந்து, நிலவில் தன் பயணத்தைத் தொடங்கும். ரோயர் சரியாக லாண்டரிலிருந்து வெளியே வந்து நிலவில் இறங்கிவிட்டால், 100% சந்திரயான் 3 திட்டம் முழு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். 

இந்த பத்து நிலைகளையும் சரியாக சந்திரயான் 3 விண்கலம் அடைந்தால் மட்டுமே, இந்தியர்களாகிய நமது கனவு மெய்ப்படும் எனலாம். இதற்கு மொத்தமாக 40 நாட்கள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த முறை லாண்டர் பகுதி சரியாக தரையிறங்க பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த முறை நிச்சயம் நாம் சாதனைப் பட்டியலில் இடம் பெறுவோம் என நம்பலாம். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com