அதிகரித்துவரும் பக்தர்கள் கூட்டத்தால், சபரிமலை ஐயப்பன் கோவிலில் தரிசன நேரத்தில் மாற்றம்! கோயில் நிர்வாகம் முடிவு!

சபரிமலை ஐயப்பன் கோவில்
சபரிமலை ஐயப்பன் கோவில்
Published on

கடந்த வாரம் வியாழக்கிழமையன்று கார்த்திகை மாதம் துவங்கியதையொட்டி, சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் பெருந்திரளாக கூடி ஐயப்பனை தரிசனம் செய்து வருகின்றனர்.

மண்டல பூஜையையொட்டி, நாளுக்கு நாள் சபரிமலையில் ஐயப்ப பக்தர்கள் கூட்டம் அதிகமாகி வரும் வேளையில், 5-வது நாளான நேற்று தந்திரி கண்டரரு ராஜீவரு மற்றும் மேல் சாந்தி ஜெயராமன் நம்பூதிரி தலைமையில் ஐயப்பனுக்கு களபம் சார்த்தல், களப பூஜை, களப அபிஷேகம் உள்ளிட்டவை நடைபெற்றன. வழக்கம்போல், மாலை 4 மணிக்கு நடை மீண்டும் திறக்கப்பட்ட நிலையில், நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

கடந்த 5 நாட்களில், ஐயப்பனை தரிசிக்க வரும் பக்தர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டியுள்ளது.

இதனால், சன்னிதானத்தில் பக்தர்களின் கூட்டம் அதிகமாகி வருகின்ற காரணத்தால், பதினெட்டு படி ஏறி வரும்போது பக்தர்களுக்கு மூச்சு திணறல், நெஞ்சுவலி உள்ளிட்ட திடீர் உடல் நலகுறைவு ஏதேனும் ஏற்பட்டால் அதற்கான உடனடி சிகிச்சை அளிக்க அவசர சிகிச்சை மையமும், கட்டுப்பாடு அறையும் திறக்கப்பட்டுள்ளது. இந்த அவசர சிகிச்சையளிக்க ஒரு மருத்துவர் மற்றும் ஒரு செவிலியர் இந்த மையத்தில் அமர்த்தப்பட்டுள்ளனனர்.

இந்நிலையில், ஐயப்பனை தரிசிக்க வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், இன்று முதல் கூடுதலாக ஒரு மணிநேரம் சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படும் என அறிவித்துள்ளது. வழக்கமாக மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு வந்த நிலையில், பக்தர்களிடையே கூட்ட நெரிசலை தவிர்க்க, இன்று முதல் மாலை 3 மணிக்கே நடை திறக்கப்படும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com