கிரிக்கெட் விதிகளில் மாற்றம். ஸ்டம்ப்-ல் பந்து பட்டால் பேட்ஸ்மேனுக்கு ரன்!

கிரிக்கெட் விதிகளில் மாற்றம். ஸ்டம்ப்-ல் பந்து பட்டால் பேட்ஸ்மேனுக்கு ரன்!

ர்வதேச கிரிக்கெட் கவுன்சிலானது, கிரிக்கெட் வீரர்களின் நலனுக்காகவும், போட்டியில் சுவாரஸ்யத்தை அதிகரிக்கும் வகையிலும் மூன்று புதிய விதிகளை அறிமுகம் செய்துள்ளது. 

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ICC என்பது கிரிக்கெட் விளையாட்டுகளின் நிர்வாகக் குழுவாகும். இது சர்வதேச அளவில் கிரிக்கெட் விளையாட்டின் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை அமைக்கும் பொறுப்பைக் கொண்டுள்ளது. ஐசிசி யின் விதிகளானது நியாயமான ஆட்டத்தை உறுதிப்படுத்தவும், விளையாட்டின் ஒருமைப்பாட்டை பராமரிக்கவும் வடிவமைக்கப் பட்டுள்ளது. 

அதே சமயம் வீரர்களின் பாதுகாப்பையும் பார்வையாளர் களின் மகிழ்ச்சியையும் கருத்தில் கொண்டு, பல விதிகளை மேம்படுத்தி வருகிறது. இந்த விதிகள் விளையாட்டு வீரர்கள் மற்றும் அதிகாரிகளின் நடத்தை, பயன்படுத்தப்படும் உபகரணங்கள், மற்றும் விளையாடும் நிலைமைகள் உட்பட விளையாட்டின் பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியது. 

புதியதாக இணைக்கப்பட்டுள்ள விதிகள். 

  1. கள நடுவர்களின் சாஃப்ட் சிக்னல் தேவையில்லை: இதுவரை சந்தேகத்திற்கு இடமான ரன் அவுட், கேட்ச் போன்றவற்றில், களத்தில் உள்ள நடுவர்கள் மூன்றாவது அம்பையருக்கு அவர்களின் கருத்தான சாஃப்ட் சிக்னலை வழங்க வேண்டும். ஆனால் இந்த புதிய விதியினால் சாஃப்ட் சிக்னல் நடைமுறை நீக்கப்படுகிறது. இதனால் மூன்றாவது நடுவர் தன் முடிவை எந்த குறுக்கிடுமின்றி சுதந்திரமாக எடுக்கலாம் என சொல்லப்படுகிறது

2.  ஸ்டம்ப்-ல் படும் ஃப்ரீ ஹிட் ரன்கள் இனி பேட்ஸ்மேனுக்கே: ஒருவர் நோ பால் வீசினால், அதற்கு அடுத்த பந்தை Free Hit  எனக்கூறி, பேட்ஸ்மனுக்கு சாதகமாக வாய்ப்பு அளிக்கப்படும். அதில் ரன் அவுட்டைத் தவிர, எப்படி அவுட் ஆனாலும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது. ஒருவேளை அந்த பந்து நேரடியாக ஸ்டம்ப்-ல் பட்டு அதற்கு ரன் ஓடினால், அந்த ரன் எதன் கணக்கில் சேர்க்கப்படும் என்ற சந்தேகம் இருந்து வந்தது. கடந்த டி20 உலக கோப்பையிலும் பாகிஸ்தான்-இந்திய போட்டியிலும் இது குறித்து பாகிஸ்தான் வீரர்கள் நீண்ட விவாதம் செய்தனர். எனவே இது போன்ற பிரச்சனை இனி ஏற்படாமல் இருக்க, ஃப்ரீ ஹிட் பந்து ஸ்டம்ப்-ல் பட்டு ரன் ஓடினாலும், அது பேட்ஸ்மேன் கணக்கிலேயே சேர்க்கப்படும் என்ற புதிய விதி கொண்டு வரப்பட்டுள்ளது. 

3. காயம் ஏற்படுவதைத் தடுக்கும் மூன்றாவது விதி: ஒரு பேட்ஸ்மேன் வேகப்பந்தை எதிர்கொள்ளும் போது, பேட்ஸ்மேன் மற்றும் அவருக்கு அருகில் நிற்கும் விக்கெட் கீப்பர், பீல்டர்கள் என அனைவருமே ஹெல்மெட் அணிய வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 

புதியதாக சேர்க்கப்பட்டுள்ள இந்த விதிமுறைகள், வரும் ஜூன் ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வரும் என ஐசிசி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com