தி. மு. க எம்.பி ஆ.ராசா மீது குற்றப்பத்திரிக்கை!

ஆ.ராசா
ஆ.ராசா
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

முன்னாள் மத்திய அமைச்சரும், தற்போதைய தி. மு. க. வின் எம் பி.,யுமான ஆ.ராசா , 2015ல் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், அவருக்கு எதிராக, சென்னை சி. பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது .

ஆ.ராசா
ஆ.ராசா

தி.மு.க., முன்னாள் மத்திய அமைச்சரும், தற்போதைய நீலகிரி தொகுதி எம்.பி.,யுமான ஆ.ராசா , 1999 அக்., முதல் 2010 செப்., வரையிலான காலத்தில், வருமானத்துக்கு அதிகமாக, 27.92 கோடி ரூபாய் அளவுக்கு சொத்து குவித்துள்ளதாக, 2015ல் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ், சி.பி.ஐ., வழக்குப்பதிவு செய்தது.

அதனடிப்படையில்,சென்னை சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில், ராசா உள்ளிட்ட ஆறு பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகையை, சி.பி.ஐ., தாக்கல் செய்துள்ளது.

logo
Kalki Online
kalkionline.com