OpenAi நிறுவனத்திற்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல். பயனர்களின் தகவல்கள் திருடப்படுகிறதா?

OpenAi நிறுவனத்திற்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல். பயனர்களின் தகவல்கள் திருடப்படுகிறதா?
Published on

பன் ஏஐ மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்கள் மீது 150 பக்க குற்றப்பத்திரிக்கை கொண்ட வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. 

ஓபன் ஏஐ நிறுவனமானது சான் பிரான்சிஸ்கோவை தலைமையிடமாகக் கொண்ட ஏஐ ஸ்டார்ட் அப் நிறுவனமாகும். இவர்கள் வெளியிட்ட ChatGPT தொழில்நுட்பத்தால் உலகம் முழுவதும் அறியப் பட்டார்கள். இதன் பிறகுதான் பொதுமக்களுக்கு ஏஐ தொழில்நுட்பம் பற்றிய பரவலான அறிமுகம் கிடைத்தது. அன்றிலிருந்தே ஓபன் ஏஐ நிறுவனமும், அவர்களை ஆதரிக்கும் மைக்ரோசாப்ட் நிறுவனமும் பல சட்ட சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றனர். 

தனியுரிமை மீறல் குற்றச்சாட்டு வழக்குகள் முதல் பதிப்புரை மீறல் வழக்குகள் வரை, OpenAi நிறுவனம் கடந்த சில மாதங்களாகவே பல குற்றச்சாட்டுகளுடன் போராடி வருகிறது. இவர்களின் பிரச்சினை ஒவ்வொரு நாளும் அதிகரித்து வரும் நிலையில், சமீபத்தில் இந்த இரு நிறுவனங்களையும் எதிர்த்து 150 பக்க குற்றப்பத்திரிக்கை கொண்ட வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. 

ஓபன் ஏஐ மற்றும் மைக்ரோசாப்ட் ஆகிய நிறுவனங்கள் ChatGPT உள்பட, தங்கள் ஏஐ தயாரிப்புகளை சட்டவிரோதமாக மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் உருவாக்கி சந்தைப்படுத்தியுள்ளதாக பலர் அவர்கள் மீது புகார் அளித்துள்ளனர். இந்நிறுவனங்கள், தங்களின் கருவிகளை பயன்படுத்தும் நபர்களிடமிருந்து, தனிப்பட்ட தகவல்களை திருடி அதை அவர்களுக்கே தெரியாமல் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப் பட்டுள்ளது. 

இந்த நிறுவனங்கள் தங்களின் தயாரிப்புகளை தெரியப்படுத்த உலககெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான பயனர்களிடமிருந்து தரவை சட்டவிரோதமாக தொடர்ந்து சேகரித்து வருவதாக இந்த வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது.  எலக்ட்ரானிக் கம்யூனிகேஷன் தனியுரிமைச் சட்டம், கலிபோர்னியா ஊடுருவல் தனியுரிமைச் சட்டம், கணினி மோசடி மற்றும் துஷ்ரயோகச் சட்டம் போன்ற பல பிரிவுகளின் கீழ் இவர்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. 

இது இந்த நிறுவனங்களுக்கு எப்படிப்பட்ட பிரச்சினைகளை ஏற்படுத்தும் என பார்க்கும்போது, ஓபன் ஏஐ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான சாம் அல்ட்மேட் கடந்த மே மாதம் இந்தத் தொழில்நுட்பத்தின் ஆபத்து குறித்து நீதிபதிகளுக்கு முன் தெரிவித்திருந்தார். பெருகிவரும் AI மாடல்களின் அபாயங்களைக் குறைக்க அரசாங்கங்கள் ஒழுங்குமுறை நடவடிக்கை எடுக்க வேண்டியது முக்கியம் என அந்த நேரத்தில் அவர் கூறியிருந்தார். 

இதுவரை ஏஐ மாடல்களுக்கு ஒழுங்குமுறை நடவடிக்கை எடுப்பது பற்றி ஐரோப்பிய ஒன்றியம் மட்டுமே கவனம் செலுத்தியது. ஆனால், அவர்கள் இதற்கென்று ஒருங்கிணைக்கப்பட்ட சட்டம் எதுவும் கொண்டு வராததால், சமீபத்தில் இந்நிறுவனங்கள் மீது பல வழக்குகள் தொடுக்கப்பட்டு வருகிறது. இத்தகைய வழக்குகளை எதிர்கொள்வது இந்நிறுவனங்களுக்கு பெரும் போராட்டமாகவே இருக்கிறது எனலாம். 

AI தொழில்நுட்பங்களுக்கு மனித குலத்திற்கு மிகப்பெரிய தீங்கை விளைவிக்கும் ஆற்றல் இருப்பதால், சரியான முறையில் இவற்றை கையாள வேண்டும் என டெக் வல்லுனர்கள் தெரிவித்து வருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com