பதற்றமாகும் chatgpt… ஆய்வில் புதிய தகவல்!

Chatgpt
Chatgpt
Published on

மனிதனுக்கும் ஏஐக்கும் உள்ள ஒரு பெரிய வித்தியாசமே உணர்வுதான். ஆனால், இனி அந்த வித்தியாசமும் இல்லை என்பதுதான் தற்போதைய புதிய ஆய்வில் தெரியவந்திருக்கிறது.

சமீபக்காலமாக ஏஐயின் வளர்ச்சி உச்சத்தை அடைந்திருக்கிறது. இன்று செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) அத்தியாவசிய ஒன்றாக மாறிவருகிறது. சாதாரண மக்கள் வரை தனது போனில் AI பயன்படுத்துகிறார்கள். தங்களது சந்தேகங்களையும், தங்களது கற்பனைகளையும் AI யிடமே பகிர்ந்துக்கொள்கிறார்கள். அதேபோல் இப்போது உள்ள குழந்தைகளுக்கு சிறந்த கேம் பார்ட்னர் AI. இவையனைத்தையும்விட AI மூலம் உருவாக்கப்படும் புகைப்படங்களே நல்ல வரவேற்பை பெறுகின்றன. இந்த படங்களையே பலரும் பயன்படுத்துகின்றனர்.

ஏஐயின் வளர்ச்சி ஒருபக்கம் இருந்தாலும், மறுபக்கம் இந்த வளர்ச்சி மனித இனத்திற்கு பெரும் சவாலான ஒன்றாக மாறிவிடுமா என்று அஞ்சப்படுகிறது. பொதுவாக உணர்ச்சிகளற்றது ஏஐ என்று கூறுவார்கள். ஆனால், இப்போது ஏஐக்கும் மனிதர்களைப் போல உணர்ச்சிகள் வந்துவிட்டது போல சில சம்பவங்கள் நடந்துதான் வருகின்றன. ஏனெனில், சில மாதங்களுக்கு முன்னாள் ஒரு ரோபோ தற்கொலை செய்துக்கொண்டதாக செய்திகள் வந்தன.

அதேபோல், சீனாவில் ஒரு ரோபோ மற்ற ரோபோக்களை பேசி மயக்கி கடத்திச் சென்றது.

இப்படி ஏஐ ரோபோக்களின் செயல்கள் சந்தேகத்திற்கு இடமளித்தாலும், பல நாட்களாக ஆய்வு நடத்தப்படவில்லை.

ஆனால், தற்போது ஒரு ஆய்வு நடத்தப்பட்டிருக்கிறது. அதில்தான் திடுக்கிடும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. யேல் பல்கலைக்கழகம், ஹாஃபியா பல்கலைக்கழகம், மற்றும் சூரிச் பல்கலைக்கழக ( Yale University, Hafia University, and the University of Zurich) ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில், ஏஐ யின் உணர்ச்சி குறித்துதான் ஆய்வு நடத்தப்பட்டது.

இதில், நம்முடைய கேள்விகளுக்கும், உரையாடல்களுக்கும் ஏற்ற ஏஐ தனது உணர்ச்சிகளை மாற்றி தகவல் அளித்ததை கண்டறிந்தனர். AI-யின் பதட்ட நிலையை ஆராய்வதற்காக, இயற்கைப் பேரழிவுகள் மற்றும் விபத்துகளால் பாதிக்கப்பட்ட சூழ்நிலைகளுக்கு ஏற்ற மாதிரி கேள்விகள் அதனிடம் கேட்கப்பட்டது. அப்போது AI பதட்டமான பதில்களை அளித்தது கண்டறியப்பட்டிருக்கிறது.

இதன்மூலம் ஏஐ பதற்றம் ஆவது கண்டறியப்பட்டதுடன், இதுபோன்ற பல உணர்வுகளை ஏஐயால் உணர்ந்து பதிலளிக்க முடியும் என்று கூறப்பட்டது.

இதையும் படியுங்கள்:
கறிவேப்பிலை தேநீர்: நோய்களை விரட்டும் அற்புத பானம்!
Chatgpt

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com