மாத தொடக்கத்தில் உயர்ந்தது சிலிண்டர் விலை.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!

காஸ் சிலிண்டர்
காஸ் சிலிண்டர்

சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலை 101 ரூபாய் 50 காசுகள் அதிகரித்து 2 ஆயிரம் ரூபாயை நெருங்கியுள்ளது.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப, மாதத்தின் முதல் நாள் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்து வருகின்றன.

இந்தியாவில், சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப வீட்டு உபயோக மற்றும் வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு தொடங்கிய ரஷ்யா - உக்ரைன் போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை அதிகரித்ததைத் தொடர்ந்து பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு சிலிண்டர் விலை பல மடங்கு அதிகரித்தது.

பின்னர் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய்யின் மதிப்பு குறைந்ததைத் தொடர்ந்து மீண்டும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் எரிவாயு சிலிண்டரின் விலைக் குறைந்தது. இந்த நிலையில் தற்போது, வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை அதிகரித்துள்ளது. தற்போது இஸ்ரேல் - ஹமாஸ் இடையே நடைபெற்று வரும் போர் காரணமாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெய்யின் மதிப்பு உயர்ந்துள்ளதால் தற்போது வணிகப் பயன்பாட்டிற்காக எரிவாயு சிலிண்டரின் விலை உயர்ந்துள்ளது.

அதன் படி, சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலை, ஆயிரத்து 999 ரூபாய் 50 காசாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதம், வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை, ஆயிரத்து 898 ரூபாயாக இருந்த நிலையில், தற்போது 101 ரூபாய் 50 காசுகள் அதிகரித்துள்ளன. இதே போன்று, டெல்லியில் வணிக பயன்பாடு சிலிண்டர் விலை, ஆயிரத்து 833 ரூபாயாகவும், கொல்கத்தாவில் ஆயிரத்து 943 ரூபாயாகவும், மும்பையில் ஆயிரத்து 785 ரூபாயாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சென்னையில், வீட்டு உபயோக சிலிண்டர் விலை எவ்வித மாற்றமும் இன்றி 918 ரூபாய் 50 காசுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com