சென்னையில் மகளிர் உரிமை திட்டத்தில் விண்ணப்பிக்க ஜூலை 3-வது வாரம் முதல் சிறப்பு முகாம்!

சென்னையில் மகளிர் உரிமை திட்டத்தில் விண்ணப்பிக்க ஜூலை 3-வது வாரம் முதல் சிறப்பு முகாம்!
Published on

மிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகளிர் உரிமை தொகை தொடர்பான அறிவிப்பை நேற்றை தினம் வெளியிட்டார். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் எனும் பெயரில் தகுதியுள்ள பெண்களுக்கு மாதம் ரூ.1000 அரசு சார்பில் வழங்கப்பட் உள்ளது. இந்நிலையில்,  சென்னை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பிக்க ஜூலை 3வது வாரம் முதல் சிறப்பு முகாம் நடத்தப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், “சென்னையில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்துக்கு விண்ணப்பங்கள் பெற ஜூலை 3ம் வாரம் முதல் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என மாநகராட்சி அறிவித்துள்ளது. பயனாளிகளின் விவரங்களை தேர்வு செய்ய மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் நியாய விலைக்கடைகள் கண்டறியப்பட்டுள்ளன.

ஒவ்வொரு முகாமுக்கும் ஒரு பொறுப்பு அலுவலர், உதவிப் பொறியாளர், வரி மதிப்பீட்டாளர், சுகாதார அலுவலர், தூய்மைப் பணி ஆய்வாளர் உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர். தன்னார்வலர்கள் மூலம் பயனாளிகளின் பயோமெட்ரிக் விவரங்கள் சேகரிக்கப்படும். எனவும் தெரிவித்துள்ளது.

மேலும் முகாம் நடைபெறும் இடங்களில் குடிநீர், மின்விசிறி வசதி, கழிவறை வசதி உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்று சென்னை மாநகராட்சி தெரிவித்திருக்கிறது. தேவையான இடங்களில் மாற்றுத்திறனாளிகள், முதியோர், கர்ப்பிணிகளுக்கு தேவையான வசதிகள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com