கோயம்பேடு மார்க்கெட்
கோயம்பேடு மார்க்கெட்

சென்னை மக்களே அலெர்ட்.. இந்த நாளில் கோயம்பேடு மார்க்கெட் லீவ்!

Published on

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள கடை வீதிகளில் பொதுமக்கள் அதிகளவில் குவிந்து வருகின்றனர்.

விபத்தில்லா தீபாவளியை கொண்டாட கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

தீபாவளி பண்டிகை ஞாயிற்றுக்கிழமையில் வருவதால் சொந்த ஊருக்கு செல்லும் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு தீபாவளிக்கு அடுத்த நாளான நவம்பர் 13 ஆம் தேதி அரசு அலுவலகங்கள், பள்ளி கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு பொது விடுமுறை அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இந்நிலையில், தீபாவளிக்கு அடுத்த நாளான நவம்பர் 13 ஆம் தேதி, திங்கட்கிழமை அன்று கோயம்பேடு சந்தை செயல்படாது என்று கோயம்பேடு அனைத்து சங்கங்களில் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. செவ்வாய்க்கிழமை முதல் கோயம்பேடு காய்கறி சந்தை வழக்கம் போல் இயங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் காய்கறிகள் வாங்குபவர்கள் முன்கூட்டியே வாங்கி வைத்து கொள்ள வேண்டும்.

logo
Kalki Online
kalkionline.com