சென்னையில் நடுவழியில் நின்ற மெட்ரோ ரயில்.. சுரங்கப் பாதையில் திக்..திக்..!

chennai metro
chennai metrosource:kannadaprabha.com
Published on

சென்னை சென்ட்ரல் - உயர்நீதிமன்றம் இடையே மெட்ரோ இரயில் சேவை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு இருந்து வருகிறது. இந்நிலையில் இந்தச் சுரங்கப் பாதையில் மெட்ரோ ரயில் நடுவழியில் நின்றுள்ளது. மின்சாரப் பிரச்சனை இதற்கு காரணமாக கூறப்படுகிறது.மெட்ரோ இரயில் பாதி வழியில் நின்றதால், மெட்ரோ ரயிலுக்குள் இருந்த பயணிகள் பலரும் அதிர்ச்சி அடைந்தனர்.இது தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஏற்பட்டுள்ளதாக மெட்ரோ இரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

மெட்ரோ ரயில் பாதி வழியில் நின்றதால், சுமார் 20 நிமிடங்கள் பயணிகள் தவித்தனர்.மேலும்,இந்த 20 நிமிடங்களில் தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டு மெட்ரோ ரயில் பயணம்,பாதுகாப்பாக மீண்டும் தொடங்கியது. சென்னையில் போக்குவரத்து நெரிசல் மிக அதிகமாக இருக்கும் நிலையில், பயணிகளுக்கு வசதியான பயணமாக மெட்ரோ ரயில் பயணம் அமைந்திருக்கிறது. சென்னை விமான நிலையம் முதல் விம்கோ நகர் மற்றும் பரங்கி மலை முதல் சென்ட்ரல் வரை என்று 2 வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றனர்.

கடந்த சில மாதங்களாக சென்னையில் மெட்ரோ ரயிலை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது. நவம்பர் மாதத்தில் மட்டும் சுமார் 93 லட்சம் பேர் மெட்ரோ ரயிலில் பயணம் மேற்கொண்டுள்ளது குறிப்பித்தக்கது. குறிப்பாக பணிக்கு செல்வோர் பலரும், மெட்ரோ ரயிலில் பயணிப்பது அதிகரித்து வருகிறது.

தற்போது சென்னையில் மழை அதிகரித்துள்ளதால், அதிகாலையிலேயே மெட்ரோவில் பயணித்து வருகின்றனர். சுமார் 20 நிமிடங்களாக பயணிகள் மெட்ரோ ரயிலுக்குள் சிக்கிக் கொண்டிருந்த நிலையில், பின்னர் பயணிகள் இறக்கப்பட்டு சுரங்கப்பாதை வழியாக பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். இந்த காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இதன்பின் சுமார் அரைமணி நேரத்திற்கு பின் மெட்ரோ ரயில் சேவை சீரானது. சென்னையில் மெட்ரோ ரயிலின் சுரங்கப் பாதையில் பயணிகள் இறக்கிவிடப்பட்டு வெளியேற்றப்படுவது இதுவே முதல்முறையாகும். இதனால் பலரும் தங்கள் அதிர்ச்சியை சமூக ஊடகங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com