குடிநீர் லாரிகளில் வந்த புதிய விதிமுறை: ‘ஜிபிஎஸ்’ கருவி... ரூ.10,000 அபராதம்...!

குடிநீர் வினியோகத்தில் முறைகேடுகளை தடுக்க தண்ணீர் எடுத்து செல்லும் லாரிகளில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டு உள்ளது.
Chennai Metrowater Supply
Chennai Metrowater Supplyimg credit- The Hindu
Published on

சென்னையில் உள்ள குடிநீர் லாரிகள் சென்னை மாநகர் முழுவதும் மக்களுக்கான தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து வருகின்றன. குறிப்பாக, தண்ணீர் பற்றாக்குறை உள்ள பகுதிகளில் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதில் குடிநீர் லாரிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன என்றே சொல்லலாம். மேலும் பொதுமக்கள் தங்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய கட்டணமில்லா தொலைபேசி எண்கள் மூலம் தொடர்பு கொண்டு குடிநீர் பெறும் வசதியும் உள்ளது. அந்த வகையில் சென்னை நகர மக்களுக்கு மட்டும் நாள்தோறும் 107 கோடி லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

சென்னையில் குடிநீர் இணைப்பு இல்லாத இடங்களில் சாலையோரம் வைக்கப்பட்டுள்ள தொட்டிகள், குடியிருப்புகள், வணிக வளாகங்கள், மற்றும் நிறுவனங்களுக்கு நாள்தோறும் 452 ஒப்பந்த லாரிகள் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த லாரிகள், மூன்று ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் குடிநீர் கொண்டு செல்லும் லாரிகள் தெருவோரம் வைக்கப்பட்டுள்ள டோங்குகளில் தண்ணீரை முழுவதுமாக நிரப்பாமல் பாதியளவு மட்டும் நிரப்பி விட்டு மீதமுள்ள குடிநீரை வணிக வளாகங்களுக்கு அதிக விலைக்கு விற்று பணம் சம்பாதிப்பதாகவும், அதேபோல் பணம் செலுத்தி வாங்கும் குடிநீரையும் அவர்களது தொட்டிகளில் முழுவதும் நிரப்பாமல் மீதம் எடுத்து சென்று வெளியே விற்பனை செய்வதாகவும் குடிநீர்வாரிய அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தது.

இதையும் படியுங்கள்:
குப்பை டிரக், ஜி.பி.எஸ் மயமாகிறது - கோவை மாநகராட்சியின் ஸ்மார்ட் திட்டம்!
Chennai Metrowater Supply

அதேபோல் குடிநீர் நிரப்பும் நிலையங்களிலும் அதிகாரிகளுக்கு தெரியாமல் லாரிகளின் மூலம் குடிநீர் நிரப்பி வெளியே கொண்டு செல்வதால் குடிநீர் வாரியத்துக்கு அதிகளவு வருவாய் இழப்பு ஏற்பட்டு வந்தது.

இதனைத்தொடர்ந்து குடிநீர் வினியோகத்தில் முறைகேடுகளை தடுக்கும் வகையில் குடிநீர் வாரியம் புதியவழிமுறையை கொண்டுவந்துள்ளனர். அதாவது குடிநீர் விநியோகத்தில் நடக்கும் முறைகேடுகளை தடுக்க, தண்ணீர் எடுத்து செல்லும் லாரிகளில் ஜிபிஎஸ் கருவி பொருத்தி, கட்டுப்பாட்டு அறை வாயிலாக, லாரிகள் எங்கெல்லாம் செல்கின்றன என கண்காணிக்கும் நடவடிக்கையில், குடிநீர் வாரியம் இறங்கியுள்ளது.

அதுமட்டுமின்றி லாரியின் தொட்டியில், சென்சார் மீட்டரை பொருத்தி நீர் நிரப்பும் நிலையத்தில் இருந்து எடுத்துச் செல்லும் குடிநீர் குறிப்பிட்ட பகுதிகளுக்கு ஒழுங்காக செல்கிறதா? அங்குள்ள மக்களுக்கு குடிநீர் முழுவதும் வினியோகம் செய்யப்படுகிறதா என்றும் கண்காணிக்கப்படுகிறது.

இதுகுறித்து குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறும்போது, குடிநீர் வினியோகிக்கும் ஒவ்வொரு லாரிக்கும் பதிவு எண் அடிப்படையில் குடிநீர் வினியோகம் தொடர்பான அனைத்து தகவல்களும் அடங்கிய ஸ்மார்ட் அட்டை வழங்கப்பட்டு உள்ளதாக கூறினார். அதில் எந்த பகுதிக்கு எந்த லாரி செல்ல வேண்டும், எத்தனை லிட்டர் குடிநீர் வழங்க வேண்டும் உள்ளிட்ட விபரங்கள் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கும்.

பணம் செலுத்தி குடிநீர் வாங்கினால், அதற்கான தொட்டியில் நிரப்ப வேண்டும். மீதமாகும் குடிநீரை நீர் நிரப்பும் நிலையத்திற்கு எடுத்துச் வர வேண்டும். வேறு இடங்களில் ஊற்றக்கூடாது. அதேபோல் குடிநீர் லாரிகள் வீட்டு தொட்டியில் இருந்து, 50 மீட்டர் சுற்றளவை கடந்து சென்றால், தானியங்கி வாயிலாக ஸ்மார்ட் அட்டை துண்டிக்கப்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அதேபோல் தெருவில் உள்ள டேங்க்குகள் இருந்தால், ஒவ்வொரு டேங்க்குக்கும் ஒரு நம்பர் உள்ளது. அதில் தான் ஊற்ற வேண்டும். தவறி வேறு விதமாக பயன்படுத்தினால், அட்டையின் இயக்கம் துண்டிக்கப்படும்.

இதையும் படியுங்கள்:
கோடையை சமாளிக்க பொதுமக்களுக்கு தடையின்றி குடிநீர் விநியோகம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!
Chennai Metrowater Supply

ஓட்டுநர்கள் முறைகேடு செய்தால், ஸ்மார்ட் அட்டையின் இயக்கம் முதல்முறை துண்டிக்கப்பட்டால், ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும். இதுபோல், மூன்று முறை முறைகேடில் ஈடுபட்டால் சம்பந்தப்பட்ட லாரியின் ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com