சென்னையில் பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள் நடத்த 15 நாட்களுக்குத் தடை விதிக்கப்படுவதாக சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தின் எதிரொலியாகத் தமிழகம் முழுவதும் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகள் அதிகரிக்கப் பட்டுள்ளது. மேலும் கோவை சிலின்டர் வெடிப்பு விசாரணையை தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டு, என்ஐஏ அதிகாரிகள் தீவிர விசாரணி மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் மேலும் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்கும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப் படுத்தப்பட்டுள்ளன. அந்த வகையில் சென்னையிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த வகையில் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நேற்று பிறப்பித்த உத்தரவில் தெரிவித்ததாவது;
சென்னையில் அடுத்த 15 நாட்களுக்குத் எந்தவிதமான பேரணிகளோ ஆர்ப்பாட்டங்களோ நடத்த தடை விதிக்கப்படுகிறது. இந்த தடை உத்தரவு அக்டோபர் 30-ம் தேதி முதல் நவம்பர் 14-ம் தேதி இரவு 11 மணி வரை அமலில் இருக்கும்.
-இவ்வாறு சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.