சென்னை-நெல்லை வந்தே பாரத் ரயில் சேவை.. நாளை மறுநாள் தொடக்கம்.. கட்டணம் எவ்வளவு தெரியுமா?

வந்தே பாரத் ரயில்
வந்தே பாரத் ரயில்
Published on

சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயில் சேவை நாளை மறுநாள் தொடங்கப்படுகிறது. தென் மாவட்ட பயணிகள் மிகவும் எதிர்பார்த்து காத்திருந்த சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயில் சேவையின் 2-வது நாள் சோதனை ஓட்டம் இன்று நடந்து முடிந்தது.

இந்திய ரயில்வே துறையில் மிகவும் அதிவேக ரயிலாகவும், மிகவும் சொகுசான ரயிலாகவும் வந்தே பாரத் ரயில் இயங்கி வருகிறது. இந்த வந்தே பாரத் ரயில் பெட்டிகள் சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் இருந்து தயாரிக்கப்படுகிறது. நாட்டின் முதல் வந்தே பாரத் ரயில் சேவை டெல்லி-வாரணாசி இடையே கடந்த 2019ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தற்போது வரை 25 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

இதற்கு மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வருவதால், இந்தாண்டு இறுதிக்குள் நாட்டில் 75 வந்தே பாரத் ரயில்களை இயக்க வேண்டும் என்பதே இந்திய ரயில்வே இலக்கு வைத்துள்ளது. அதனால் பல்வேறு வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இதுவரை 40க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயங்கி வருகிறது.

இந்நிலையில், தென் மாவட்ட பயணிகள் மிகவும் எதிர்பார்த்து காத்திருந்த நெல்லை - சென்னை இடையே வந்தே பாரத் ரயில் வரும் 24ஆம் தேதி முதல் இயக்கப்பட உள்ளது. இதனை பிரதமர் மோடி காணொலி வாயிலாக தொடங்கி வைக்கிறார். இதற்கான சோதனை ஓட்டம் நேற்றும், இன்றையும் நடைபெற்றது.

சென்னை டூ நெல்லை சென்றடைய 10 மணி முதல் 12 மணி நேரம் ஆகும். ஆனால், நெல்லை-சென்னை வந்தே பாரத் ரயில் ஏழு அரை மணி நேரத்தில் செல்வதால் இதற்கு மிகப் பெரிய வரவேற்பு நிச்சயம் இருக்கும்.

சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு வந்தே பாரத் ரயிலில் ஏ.சி.சேர்கார் பெட்டியில் பயணம் செய்ய கட்டணமாக ரூ.1,620 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எக்ஸிகியூட்டிவ் சேர்கார் கட்டணம் ஒருவருக்கு 3,025 ரூபாய். இந்த பெட்டியில் இருக்கைகள் மிகவும் வசதியாக இருக்கும். அதனால் இவற்றின் கட்டணம் அதிகமாகும்.

மேலும், இந்த ரயிலில் பயணிகளுக்கு 2 வேளை உணவு வழங்கப்படும். மதியம் மற்றும் இரவு உணவுடன் டீ, காபி, சூப், பிஸ்கட் போன்றவை வழங்கப்படும். இந்த ரயில் பேண்ட்ரி கார் வசதி  இல்லை என்றாலும் ஐஆர்சிடிசி மூலம் உணவு ஏற்பாடு செய்யப்படுகிறது.

டிக்கெட் முன்பதிவு செய்யும்போதை பயணிகளுக்கு சைவ, அசைவ உணவு பற்றி கேட்டு பதிவு செய்யப்படும். உணவிற்கும் சேர்த்துதான் டிக்கெட் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சாதாரண சேர்கார் பயணிகளுக்கு உணவிற்காக 300 ரூபாயும், எக்சிகியூட்டிவு சேர்கார் பயணிகளுக்கு 370 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com