Wonderla Ticket Price | டிசம்பர் 2 முதல் சென்னையில் வொண்டர்லா.. ஒரு நபருக்கு டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

Wonderla
Chennai Wonderla
Published on

சென்னையில் எண்டர்டெயின்மெட்டுக்கா பஞ்சம் என்ற அளவிற்கு ஏகப்பட்ட விஷயங்கள் உள்ளன. தியேட்டர்கள், மால்கள், தீம் பார்க்குகள் என பல விஷயங்கள் உள்ளன. இந்த வரிசையில் தற்போது புதிய தீம் பார்க் இணைந்துள்ளது. அதுவும் ஆசியாவிலேயே மிகப்பெரிய ரோலர் கோஸ்டர் கொண்ட தீம் பார்க் என்பதால் சிறப்பு கவனம் பெற்றுள்ளது.

இந்தியாவின் முன்னணி பொழுதுபோக்கு பூங்கா நிறுவனமான வொண்டர்லா, தற்போது தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் புதிய பொழுதுபோக்கு பூங்காவை நிறுவ உள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே அமைய உள்ள இந்தப் பொழுதுபோக்கு பூங்கா வரும் டிசம்பர் 2ஆம் தேதி திறக்கப்படவுள்ளது.

பள்ளி விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களில் பொழுதுபோக்கு பூங்காவைத் தேடி பொதுமக்கள் படையெடுப்பது வழக்கம். தமிழ்நாட்டில் பல நிறுவனங்கள் கோடிக்கணக்கான பணத்தை பொழுதுபோக்கு பூங்காவில் முதலீடு செய்துள்ளன. இந்தியாவில் பெங்களூரு, ஹைதராபாத், புவனேஸ்வர் மற்றும் கொச்சி ஆகிய முக்கிய நகரங்களில் பொழுதுபோக்கு பூங்காக்களை அமைத்துள்ளது வொண்டர்லா நிறுவனம். தமிழ்நாட்டிலும் வொண்டர்லாவின் பொழுதுபோக்கு பூங்கா அமைய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில் நடப்பாண்டு டிசம்பர் 2ஆம் தேதி வொண்டர்லாவின் பொழுதுபோக்கு பூங்கா சென்னையில் திறக்கப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் பழைய மகாபலிபுரம் சாலையில், திருப்போரூர் அருகே உள்ள இள்ளளூர் எனுமிடத்தில் கிட்டத்தட்ட 65 ஏக்கர் பரப்பளவில் வொண்டர்லா பொழுதுபோக்கு பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. ரூ.510 கோடி செலவில் அமைக்கப்பட்டு வரும் இந்தப் பூங்காவின் பணிகள் 70% வரை நிறைவடைந்துள்ளன. மீதமுள்ள பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு டிசம்பரில் பொழுதுபோக்கு பூங்கா திறக்கப்பட உள்ளது.

டிசம்பர் மாதத்தில் பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை அதனைத் தொடர்ந்து கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறை வருவதால், இங்கு பொதுமக்கள் கூட்டம் அலைமோதும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அதற்கடுத்த மாதத்தில் பொங்கல் விடுமுறையும் வருவதால் வொண்டர்லா பொழுதுபோக்கு பூங்காவிற்கு தமிழக மக்கள் பலரும் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னையில் அமையுள்ள வொண்டர்லா பொழுதுபோக்கு பூங்காவில் கிட்டத்தட்ட 52 சவாரிகள் இடம் பெற உள்ளன. இதில் 16 நீர் சவாரிகளும், குழந்தைகளுக்கான 10 சவாரிகளும் இடம்பெற உள்ளன.

வொண்டர்லா சென்னையில் உலகத்தரம் வாய்ந்த சவாரிகளான மிகப்பெரிய பொலிகர் மற்றும் மாபில்லார்ட் இன்வெர்ட்டர்ட் கோஸ்டர் தஞ்சோரா, ஸ்பின் மில், ஸ்கை ரயில் உள்ளிட்ட பல சவாரிகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வொண்டர்லா சென்னைக்கான அடிப்படை விலை டிக்கெட்டுகள் 1489 ரூபாய்க்கு துவங்கப்படுகிறது. ஆன்லைன் முன்பதிவு செய்தால் 10% தள்ளுபடியும், கல்லூரி ஐடிஐ மாணவர்களுக்கு 20% சலுகையும், குழுக்கள் மற்றும் பருவக்காலங்களுக்கு ஏற்ப பிற தேர்ந்தெடுக்கப்பட்ட சலுகைகளும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி உட்பட இந்த கட்டணம் வசூலிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வார நாட்களில் இந்த கட்டணமும், வார இறுதி நாளில் ரூ.1,789 வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வொண்டர்லாவின் செயல் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனரான அருண் சிட்டிலப்பிள்ளி, தீரன் சவுத்ரி, அஜி கிருஷ்ணன், சென்னை பூங்கா தலைவர் வைஷாக் ரவீந்திரன் ஆகியோர் செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளனர். அதில், போக்குவரத்து துறையில் வொண்டர்லாவில் பேருந்து நிறுத்தும்படி அரசுடன் ஆலோசனை செய்து வருகிறோம். வொண்டர்லாவில் இதுவரை பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது கிடையாது. இதற்காக பிரத்யேக குழுக்கள் உள்ளது. வரும் பொதுமக்கள் கீழே விழுந்து அடிப்பட்டால் அவர்களுக்கு சிகிச்சை செய்ய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களும் தயாராக உள்ளனர். துவங்கும் முதல் நாளான டிசம்பர் 2 ஆம் தேதி மட்டும் ரூ.1,199 ரூபாய் டிக்கெட் விற்பனை செய்யப்படுவதாகவும் தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்:
மாரி செல்வராஜின் 'பைசன்' படம்: காத்திருப்பு முடிந்தது! ஓடிடி வெளியீட்டு தேதி இதோ!
Wonderla

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com