சத்தீஸ்கர்: முதல்முறை வாக்காளர்களை குறிவைக்கும் காங்கிரஸ்!

காங்கிரஸ்
காங்கிரஸ்

த்தீஸ்கர் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இளைஞர்களைக் கவரும் வகையில் தலைநகர் ராய்ப்பூரில் வருகிற 30 ஆம் தேதி மராத்தான் ஓட்டம் நடத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.

முதன்முறை வாக்காளர்களைக் குறிவைத்து இந்த நிகழ்வுக்கு காங்கிரஸ் ஏற்பாடு செய்துள்ளது. மராத்தான் ஓட்டம் மூலம் இளை{ர்களை வாக்களிக்க தூண்டவும், மாநிலம் மற்றும் நாட்டின் எதிர்காலத்தை கட்டியெழுப்புவதில் இளைஞர்கள் முக்கிய பங்காற்ற வேண்டும் என்பதுமே இதன்  நோக்கமாகும்.

தேர்தல் ஆணையம் கொடுத்துள்ள புள்ளிவிவரங்களின்படி மாநிலத்தில் 7,23,771 இளம் வாக்காளர்கள் உள்ளனர். சத்தீஸ்கர் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நவம்பர் 7 மற்றும் நவம்பர் 17 என இரு கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்த மராத்தான் போட்டியில் முதலில் வரும் 100 பேருக்கு முதல்வர் பூபேஷ் பாகலுடன் உரையாட வாய்ப்பு அளிக்கப்படும் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

இந்த நிகழ்வில் பங்கேற்க இளம் வாக்காளர்கள் தங்கள் பெயரை ஆன்லைன் மூலமாகவும், ஆஃப் லைன் மூலமாகவும் பதிவு செய்வதற்கான எண்ணையும் காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. முதன்முறை வாக்காளர்களுக்கு ஆஃப்லைன் முறையில் பதிவு செய்வதற்கான விண்ணப்பத்தை கட்சித் தொண்டர்கள் வழங்குவார்கள். இந்த மாராத்தான் போட்டியில் முதல்வர் பூபேஷ் பாகல், காங்கிரஸ் தலைவர் கன்னையா குமார் மற்றும் விளையாட்டு ஆர்வலர்கள் பங்கேற்கின்றனர்.

மராத்தான் ஓட்டம் ராய்ப்பூரில், தெலிபந்த தலாப் சதுக்கத்திலிருந்து காலை 7 மணிக்கு தொடங்கி காந்தி மைதானத்தில் முடிவடையும். 2018 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் 90 பேரவைத் தொகுதிகளில் 15 தொகுதிகளில் வெற்றி வித்தியாசம் 5,000-த்துக்கும் குறைவாகவே இருந்தது. மாநிலத்தின் மொத்த மக்கள் தொகையில் 25 சதவீதம்பேர் 18 முதல் 25 வயதுக்கு உட்பட்வர்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

ஆளும் காங்கிரஸ் அரசு 3,32,770 உறுப்பினர்களைக் கொண்ட ராஜீவ் யுவ மித்ரன் கிளப்பை தொடங்கியது. இதன் மூலம் 50,000 பேருக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆத்மானந்த் ஆங்கில வழி கல்லூரிகள் நிறுவப்பட்டுள்ளதாகவும், கல்லூரி மாணவர்களுக்கு இலவச பேருந்து சேவை அளிக்கப்பட்டு வருவதாகவும் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

இதனிடையே பல்வேறு ஆய்வுகள், களநிலவரத்தின்படி வெற்றிவாய்ப்பின் அடிப்படையில் தொகுதிகள் முடிவு செய்யப்படுவதாகவும் கட்சியின் மூத்த தலைவர்கள் தெரிவித்தனர். பல்வேறு அமைப்புகள், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியுடன் இணைந்து செயலாற்ற வலுவான தரவுகளை வழங்கியுள்ளன. எங்கள் வேட்பாளர்கள் அனைவரும் வெற்றிபெறுவார்கள் என்று உறுதியாக நம்புகிறோம் என்று கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com