‘அனாவசியமாக குண்டர் சட்டத்தைப் பயன்படுத்த வேண்டாம்’ டிஜிபிக்கு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் வலியுறுத்தல்!

‘அனாவசியமாக குண்டர் சட்டத்தைப் பயன்படுத்த வேண்டாம்’ டிஜிபிக்கு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் வலியுறுத்தல்!

ட்ட விரோதமாக மது தயாரிப்பது, கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபடுவது, போதைப்பொருள் கடத்துவது, வன்முறையில் ஈடுபடுவது, வனக் குற்றச் செயல்களில் ஈடுபடுவது, சட்டத்துக்கு விரோதமான பொருட்களை கடத்துவது, நில அபகரிப்பு போன்ற குற்றச்செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தால் அவர்களை குண்டர்கள் என்று சட்டம் சொல்கிறது. இவர்களுக்கு எதிராக எடுக்கப்படும் சட்டமே ‘குண்டர் சட்டம்’ என்று கூறப்படுகிறது.

ஒருவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தால், அவர் பன்னிரெண்டு மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவிக்க நேரிடும். அரசு நிர்வாகம் விரும்பினால், அவரை முன்கூட்டியே விடுதலை செய்யலாம். இந்தச் சட்டத்தின் கீழ் ஒருவர் கைது செய்யப்பட்டு, சில நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்ட நிலையில், அவர் அந்த நிபந்தனைகளை மீறினால், அவருக்கு மீண்டும் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட ஒருவர் தான் நிரபராதி என்று நிரூபிக்க விரும்பினால், அவர் சார்பாக அவரது வழக்கறிஞர் வாதாட முடியாது. அவரது சார்பாக அவரது குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே மேல்முறையீட்டுக் குழுவை அணுக முடியும்.

குண்டர் சட்டத்தின் தன்மை இப்படி இருக்க, தமிழ்நாடு அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, தமிழக டிஜிபி சைலேந்திர பாபுவுக்கு ஒரு கடிதம் எழுதி இருக்கிறார். அந்தக் கடிதத்தில், ‘பெரும்பாலான வழக்குகளில் குண்டர் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது. குண்டர் சட்டத்தை தேவையில்லாமல் பயன்படுத்தக்கூடாது. பொது அமைதி பாதிக்கப்படும் சந்தர்ப்பங்களில் மட்டுமே குண்டர் சட்டத்தைப் பயன்படுத்த வேண்டும். மேலும், கடுமையான குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது மட்டுமே குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று அவர் கூறி இருக்கிறார். மேலும், குண்டர் சட்டத்தின்கீழ் தடுப்பு காவல் - பரிந்துரைக்கும் முன் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து சுற்றறிக்கை அனுப்பும்படியும் அவர் வலியுறுத்தி இருக்கிறார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com