காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கு தலைமை தேர்தல் அதிகாரி நோட்டீஸ் ! தேர்தல் நடத்தை விதி மீறல்!

இந்திய தேர்தல் ஆணையம்
இந்திய தேர்தல் ஆணையம்

திரிபுராவில் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கு தலைமை தேர்தல் அதிகாரி நோட்டீஸ் அனுப்பியுள்ளார். திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா ஆகிய 3 வடகிழக்கு மாநிலங்களுக்கும் சட்டப்பேரவை தேர்தல்கள் அறிவிக்கப்பட்டன

60 தொகுதிகளை கொண்ட திரிபுரா சட்டப்பேரவைக்கான தேர்தல் இன்று ஒரே கட்டமாக நடக்கிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மதிய 1 மணி நேர நிலவரப்படி 51.35 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. மாலை 4 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்தது.

இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கு தலைமை தேர்தல் அதிகாரி நோட்டீஸ் அனுப்பியுள்ளார். தேர்தல் நடத்தை விதிகளை மீறி தங்கள் கட்சிகளின் அதிகாரப்பூர்வ ட்விட்டர்பக்கத்தில் வாக்களிக்க வேண்டுகோள் விடுத்து பதிவிட்டதால் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. நாளை மாலை 5 மணிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த தேர்தலில் திரிபுராவில் ஆளும் கட்சியாக இருக்கும் பாஜக மீண்டும் ஆட்சியை தக்க வைக்க முயற்சிகள் செய்து வருகிறது. மார்க்சிஸ்ட் கட்சியோ இழந்த ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற கடும் முனைப்பில் உள்ளது.

இந்த இரு கட்சிகளுக்கும் இடையே அங்கு கடும் போட்டி நிலவுகிறது. இரு கட்சிகளும் த்ரிபுராவில் கடும் தேர்தலில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தனர்.தேர்தல் விதிமுறைகளை மீறி இரு கட்சிகளும் ட்விட்டர் பக்கத்தில் ஓட்டுக்களை கான்வாஸ் செய்தது திரிபுராவில் பரபரப்பினை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்தே தலைமை தேர்தல் அதிகாரி இந்த நடவடிக்கையினை மேற்கொண்டார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com