தலைமை நிர்வாகி ராஜினாமா. என்ன நடக்கிறது ட்விட்டரில்?

தலைமை நிர்வாகி ராஜினாமா. என்ன நடக்கிறது ட்விட்டரில்?

ட்விட்டர் நிறுவனத்தில் அப்படி என்னதான் நடக்கிறதோ தெரியவில்லை. அவ்வப்போது அதிரடி மாற்றங்கள் நடந்து வண்ணம் இருக்கிறது. தற்போது அதன் தலைமை நிர்வாகி முறையான காரணங்கள் எதுவும் தெரிவிக்காமல் திடீரென ராஜினாமா செய்துள்ளார். 

கடந்த 2022 ஆம் ஆண்டில் பல லட்சம் கோடிகளை செலவு செய்து twitter நிறுவனத்தை எலான் மாஸ்க் வாங்கினர். அவர் வாங்கியதிலிருந்தே அதில் பல பிரச்சினைகள் எழுந்து வருகிறது. அதன் மூலமாக அவருக்கு போதிய லாபமும் கிடைப்பதில்லை. சொல்லப்போனால் எலான் மாஸ் கைக்கு ட்விட்டர் நிறுவனம் வரும்போதே அது நஷ்டத்தில்தான் இயங்கிக் கொண்டிருந்ததாம். அந்நிறுவனத்தை அவர் வாங்கிய பிறகும் லாபம் ஈட்டும் வகையில் அவரால் கொண்டு செல்ல முடியவில்லை. இதன் காரணமாகவே எப்படியாவது லாபம் பார்த்துவிட வேண்டுமென பல அதிரடி நடவடிக்கைகளை அவ்வப்போது மேற்கொண்டு வருகிறார். 

இதற்காக பல ஊழியர்களை நிறுவனத்திலிருந்து நீக்குதல், ப்ளூடிக் பயனர்களுக்கு கட்டணம், அதிக பின்தொடர்பவர்களை வைத்திருக்கும் பிரபலங்களின் ப்ளூ டிக்கைப் பறிப்பது போன்ற நடவடிக்கைகள் ட்விட்டர் பயனர்களின் மத்தியில் மிகப்பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியது. இதை சுதாரித்துக்கொண்ட எலான் மஸ்க் தனது வியாபார தந்திரத்தைக் காட்ட ஆரம்பித்தார். ட்விட்டர் பயனர்களை மொத்தமாக அவர் பக்கம் இழுக்க பல அட்டகாசமான அப்டேட்களைக் கொடுக்கத் தொடங்கினர். 

சமீபத்தில் ட்விட்டர் நிறுவனத்திற்கு புதிய சிஇஓவை அறிமுகம் செய்தார். வாட்ஸ் அப், டெலிகிராமில் இருக்கும் ஆடியோ மற்றும் வீடியோ வசதிகளை ட்விட்டரிலும் கொண்டுவர உள்ளதாகத் தெரிவித்தார். இதனால் ட்விட்டரின் யூசர் எண்ணிக்கை அதிகரித்தது. இதுமட்டுமின்றி மேலும் ஒரு இன்ப அதிர்ச்சியாக 2 மணி நேரம் நிளம் கொண்ட காணொளிகளை ட்விட்டரில் பதிவேற்றலாம் என்றும் அறிவித்தார். இப்படி நாளுக்கு நாள் அப்டேட்டுகளை அள்ளி வீசிய ட்விட்டர் நிறுவனத்தில் மீண்டும் சர்ச்சை கிளம்பி இருக்கிறது. 

சமீபத்தில் புதியதாக அறிவிக்கப்பட்ட ட்விட்டர் நிறுவனத்தின் சிஇஓ இன்னும் சில மாதங்களில் பதவியேற்கவிருக்கும் நிலையில், அந்நிறுவன முக்கிய நிர்வாகி ஒருவர் ராஜினாமா செய்துள்ளார். ட்விட்டரில் டிரஸ்ட் அண்ட் சேஃப்டி பிரிவில் பணியாற்றி வந்த 'எல்லா இர்வின்' என்பவர்தான் ராஜினாமா செய்தவர். இதற்கு முன்னர் இதே பதவியில் 'யோல் ரோத்' என்பவர் இருந்து வந்தார். எலான் மாஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியபோது யோல் ரோத் பணியை ராஜினாமா செய்த நிலையில், அந்த இடத்திற்கு தான் எல்லா இர்வின் பணியமர்த்தப்பட்டார். சொல்லப்போனால் எலான் மாஸ்குக்கு மிகவும் பிடித்த நிர்வாகிகளில் எல்லா இர்வினும் ஒருவர். 

இவர் தற்போது தன் பதவியை ராஜினாமா செய்திருப்பது ட்விட்டர் நிறுவனத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இவர் என்ன காரணத்திற்காக ராஜினாமா செய்தார் என்பது இதுவரை தெரியவில்லை. இதனால் புதியதாக வரவிருக்கும் தலைமை நிர்வாக அதிகாரிக்கு வேலை பளு கூடுதலாக இருக்கும் எனச் சொல்லப்படுகிறது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com