தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் ஜெயந்த் மறைவுக்கு முதல்வர் இரங்கல்!

தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் ஜெயந்த் மறைவுக்கு முதல்வர் இரங்கல்!

ருணாச்சலப் பிரதேசத்தின் மண்டாலா மலைப் பகுதியில் நேற்று இந்திய ராணுவத்துக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் Cheetah விபத்துக்கு உள்ளானது. இந்த ஹெலிகாப்டர் பொம்திலா என்ற பகுதியில் பறந்துகொண்டிருந்தபோது அதன் இணைப்பு துண்டிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து அந்த ஹெலிகாப்டரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது.

இந்நிலையில் அந்த ஹெலிகாப்டர் விபத்துக்கு உள்ளானதும், அதில் பயணம் செய்த இரண்டு விமானிகளும் உயிரிழந்து இருப்பதும் தெரிய வந்தது. இந்த விபத்தில் உயிர் இழந்த ஒரு ராணுவ வீரர் மேஜர் ஜெயந்த் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். இவர் தமிழ்நாட்டின் தேனி மாவட்டம், ஜெயமங்கலத்தைச் சேர்ந்த விமானி ஆவார்.

ராணுவ வீரர் மேஜர் ஜெயந்த் மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது இரங்கலைத் தெரிவித்து இருக்கிறார். அவரது இரங்கல் செய்தியில், ‘அருணாச்சலப் பிரதேசத்தில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரர் ஜெயந்த் உயிரிழந்த செய்தி அறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். ராணுவ வீரர் மேஜர் ஜெயந்துக்கு எனது வீர வணக்கத்தைச் செலுத்துகிறேன். அவரது பிரிவால் வாடும் சக ராணுவ வீரர்கள், குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் நாட்டு மக்களுக்கு தமிழக அரசின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com