பருத்தி விலை வீழ்ச்சி பிரதமருக்கு முதல்வர் கடிதம்!

பருத்தி விலை வீழ்ச்சி பிரதமருக்கு முதல்வர் கடிதம்!

மிழ்நாட்டில் பருத்தி விலை தொடர்ந்து சரிவை சந்தித்து வந்த நிலையிலும், பருத்தி கொள்முதலில் வியாபாரிகள் திட்டமிட்டு விலையை குறைத்து முறைகேடு செய்வதாக கூறியும் தமிழ்நாட்டில் பல்வேறு பருத்தி விற்பனை கூடங்களில் பருத்தி விவசாயிகள் காடந்த மாதங்களில் போராட்டங்களை நடத்தினர். மேலும் அரசாங்கத்திற்கு கோரிக்கை வைத்தனர்.

இதைத் தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் பருத்திக்கு குறைந்தபட்ச ஆதார விலையை ஜூன் 1 முதல் கணக்கிட்டு நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழ்நாட்டில் பருத்தி விளைச்சல் சராசரி நிலையில் இருந்த போதும் அறுவடைக்குப் பிறகு விலை வீழ்ச்சி ஏற்பட்டதால் விவசாயிகள் மோசமான நிலைக்கு சென்று இருக்கின்றனர்.

சென்ற ஆண்டு குவின்டால் ஒன்றுக்கு 18 ஆயிரம் ரூபாய் கொள்முதல் செய்யப்பட்ட பருத்தி தற்போது குவின்டால் ஒன்றுக்கு 5500 என்ற விதத்தில் கொள்முதல் செய்யப்படுகிறது.

இதனால் பருத்தி விவசாயிகள் மிகப்பெரிய நஷ்டத்தை சந்தித்திருக்கின்றனர். இதனால் 2023 - 2024 ஆம் ஆண்டிற்கான குறைந்தபட்ச ஆதார வழியாக நடுத்தர இலை பருத்திக்கு 6, 620 ரூபாயும், நீட்ட இலை பருத்திக்கு 7,020 ரூபாய் என்று நிர்ணயம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com