கிண்டி சிறுவர் இயற்கை பூங்காவை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

சிறுவர் இயற்கை பூங்காவை திறந்து வைத்த முதல்வர்
சிறுவர் இயற்கை பூங்காவை திறந்து வைத்த முதல்வர்
Published on

மிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (3.8.2024) சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை சார்பில் சென்னை, கிண்டி சிறுவர் பூங்கா 30 கோடி ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டு, பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ள கிண்டி சிறுவர் இயற்கை பூங்காவை திறந்து வைத்தார். மேலும், ஒருங்கிணைந்த யானைகளின் கணக்கெடுப்பு 2024 அறிக்கையை வெளியிட்டார்.

கிண்டி சிறுவர் பூங்கா சென்னையிலுள்ள முக்கிய சுற்றுச்சூழல் சுற்றுலா தலங்களில் ஒன்றாகும். இங்கு ஆண்டுதோறும் 7 முதல் 8 லட்சம் பார்வையாளர்கள் வருகை தருகின்றனர். மேலும், சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள நூற்றுக்கணக்கான பள்ளிகளைச் சேர்ந்த 60,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பூங்காவில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கின்றனர்.

நவீன வாகனங்களை கொடியசைத்து துவக்கி வைத்த முதல்வர்
நவீன வாகனங்களை கொடியசைத்து துவக்கி வைத்த முதல்வர்

2022 - 23ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், இளம் வயதிலிருந்தே வனம் மற்றும் வன விலங்குகளைப் பற்றிய விழிப்புணர்வைக் குழந்தைகளுக்கு ஏற்படுத்த, கிண்டி குழந்தைகள் பூங்காவை மறுவடிவமைத்து, பறவைகள், வண்ணத்துப்பூச்சிகள், விலங்குகள் உள்ளடங்கிய இயற்கைப் பூங்காவாக அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அந்த அறிவிப்பிற்கிணங்க, வனம் மற்றும் வனவிலங்குகள் பற்றிய  விழிப்புணர்வுவை சிறு வயதிலிருந்தே குழந்தைகளுக்கு ஏற்படுத்துவதற்காக தற்போதுள்ள கிண்டி சிறுவர் பூங்கா புனரமைக்கப்பட்டு 30 கோடி ரூபாய் செலவில் சிறுவர்களுக்கான இயற்கை பூங்காவாக அமைக்கப்பட்டுள்ளதை தமிழ்நாடு முதலமைச்சர் இன்று திறந்து வைத்தார்.

இப்பூங்கா திறப்பு விழாவின்போது, வனவிலங்குகளை மீட்பதற்கும், வனப்பகுதிகளில் ஏற்படும் காட்டுத்தீ போன்ற விபத்துகளை தடுக்கும் பணிகளை மேற்கொள்வதற்காகவும் 9 நவீன வாகனங்களை (All Terrain Vehicles) தமிழ்நாடு முதலமைச்சர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து, இப்பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள வேடந்தாங்கல் பறவைகள் இருப்பிடத்தை திறந்து வைத்து, பூங்காவில் ஏற்படுத்தப்பட்டுள்ள மேம்படுத்தப்பட்ட பல்வேறு வசதிகளை பார்வையிட்டார்.

தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக இந்தப் பூங்காவில் 2800 சதுர மீட்டர் பரப்பளவில் மிகப்பெரிய நீர்வாழ் பறவைக் கூடம், வன உயிரின விழிப்புணர்வு மையம், விலங்குகள் மற்றும் பறவைகளின் விவரங்களை அறிந்துகொள்ளும் வகையிலான LED மின் திரைகள், நூலகம், நிர்வாக கட்டடம், அழகிய நுழைவுவாயில், நீருற்றுகள், செல்பி பாயிண்ட், குழந்தைகளுக்கான விளையாட்டுப் பகுதி, மழை நீர் வடிகால் வசதிகள், நடைபாதைகள், சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

பூங்காவை சுற்றிப் பார்த்த முதல்வர்
பூங்காவை சுற்றிப் பார்த்த முதல்வர்

மேலும், பார்வையாளர்களுக்கு உணவு மற்றும் சிற்றுண்டி கிடைக்கும் வகையில் நவீன கட்டமைப்புடன் கட்டப்பட்டுள்ள இரண்டு சிற்றுண்டி கூடங்கள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையங்கள், புதிய கழிவறைகள், மேம்படுத்தப்பட்ட  வாகனம் நிறுத்துமிடம் போன்ற வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. அத்துடன், மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதியோர்களுக்கு ஏற்ற வகையில் அவர்களின் தேவைகளை அறிந்து இப்பூங்காவில் சிறப்பு வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

தென்னிந்திய மாநிலங்களான கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேசத்தின் எல்லையோர மாவட்டங்களில் ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு 23.5.2024 முதல் 25.5.2024 வரை நடத்தப்பட்டது. இந்த கணக்கெடுப்பு தமிழ்நாட்டில் உள்ள 26 வனப் பிரிவுகளில் நடத்தப்பட்டது. இக்கணக்கெடுப்பில் 1,836 வனத்துறை ஊழியர்கள் மற்றும் 342 தன்னார்வலர்கள் என மொத்தம் 2,178 நபர்கள் ஈடுபட்டனர். இந்தக் கணக்கெடுப்பில், சேகரிக்கப்பட்ட தகவல்கள் முறையாக பகுப்பாய்வு செய்யப்பட்டு, 26 வனப் பிரிவுகளில் யானைகளின் எண்ணிக்கை மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த கணக்கெடுப்பானது யானைகளின் எண்ணிக்கை, பாலின விகிதம், யானைகளின் இயக்கவியல் மற்றும் யானைகளின் வாழ்விடத்தை சிறப்பாக நிர்வகிப்பதற்கு யானைகளின் பயன்பாட்டின் பரப்பளவு பற்றிய தெளிவான விவரங்களை வழங்கும். தமிழகத்தில் யானைகளின் எண்ணிக்கையையும் அதன் வாழ்வியல் முறைகளையும் அறிந்துகொள்ள உதவிடும் 2024ம் ஆண்டிற்கான ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு அறிக்கையை முதலமைச்சர் வெளியிட்டார்.

இதையும் படியுங்கள்:
தமிழகத்தில் இதுவரை இத்தனைப் பேருக்கு எலிக்காய்ச்சல்… சுகாதாரத்துறை அறிவிப்பு!
சிறுவர் இயற்கை பூங்காவை திறந்து வைத்த முதல்வர்

2017 கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் யானைகளின் எண்ணிக்கை 2,761 ஆக இருந்தது. இந்த அரசு பொறுப்பேற்றதிலிருந்து யானைகளின் பாதுகாப்பிற்காக மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளின் காரணமாக ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு அறிக்கை 2023ன் படி தமிழகத்தில் யானைகளின் எண்ணிக்கை 2,961 ஆக உயர்ந்தது. தற்போது அதன் தொடர்ச்சியாக, 2024ம் ஆண்டிற்கான யானைகள் கணக்கெடுப்பு அறிக்கையின்படி தமிழகத்தில் தற்போது யானைகளின் எண்ணிக்கை 3063 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் க.பொன்முடி, மா.சுப்பிரமணியன், எம்.மதிவேந்தன், சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம்.வி.பிரபாகர ராஜா, துணை மேயர் மு.மகேஷ் குமார், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, வனத்துறை முதன்மைச் செயலாளர் பி.செந்தில்குமார், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை இயக்குநர் ஆ.ர.ராகுல்நாத், முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் சுதான்சு குப்தா, முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் தலைமை வன உயிரினக் காப்பாளர் ஸ்ரீனிவாஸ் ஆர்.ரெட்டி  மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com