தமிழறிஞர் அவ்வை நடராஜனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி!

மு.க.ஸ்டாலின்  அஞ்சலி
மு.க.ஸ்டாலின் அஞ்சலி

தமிழறிஞரும், தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தருமான அவ்வை நடராஜன் உடல்நலக்குறைவால் நேற்று காலமானார், அவ்வை நடராஜன் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். 85 வயதான அவ்வை நடராஜன் கடந்த சில மாதங்களாகவே நீரிழிவு நோயால் அவதியடைந்து வந்தார்.இரண்டு நாட்களுக்கு முன்பு உடல்நிலை மிகவும் மோசமடையவே, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் காலமானார்.

சென்னை அண்ணா நகர் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள தமிழறிஞர் அவ்வை நடராஜன் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். மேலும் அவரது குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறினார். . அவ்வை நடராஜனின் தமிழ்ப் பணிகளை கெளரவிக்கும் விதமாக காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார். அவ்வை நடராஜன் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்

அவ்வை நடராஜன்
அவ்வை நடராஜன்

அவ்வை நடராஜன் குறித்த நினைவுகள்

அவ்வை நடராஜன் 1936ம் ஆண்டு திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு எனும் ஊரில் பிறந்தார். மதுரை தியாகராசர் கல்லூரியில் இவர் தமிழில் முதுகலை பட்டம் பெற்றார். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் “சங்க இலக்கியத்தில் பெயரிடு மரபு” என்னும் பொருளில் ஆய்வு செய்து 1958ஆம் ஆண்டில் ஆய்வியல் நிறைஞர் பட்டம் பெற்றார்.

அதன் பின்னர் “சங்க காலப் புலமைச் செவ்வியர்” என்னும் பொருளில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார். தமிழறிஞர் அவ்வை நடராஜன் 1992 முதல் 1995 வரை தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பொறுப்பு வகித்தார். அதன் பிறகு, 2014 ஆம் ஆண்டில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் துணைத்தலைவராக இருந்தார். 2011ம் ஆண்டு இவருக்கு நாட்டின் நான்காவது உயரிய விருதான பத்ம ஸ்ரீ விருதை மத்திய அரசு வழங்கி கவுரவித்தது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com