டாடா கார் தொழிற்சாலை - முதல்வர் திறந்து வைத்தார்..! நம்ம ஊரில் தயாராகப்போகுது ஜாகுவார்..!

tata motors car factory
tata motors car factorysource:Dailythanthi
Published on

தமிழக அரசு புதிய தொழில்துறை திட்டங் களை முன்னெடுத்து வருகிறது. அந்த வரிசையில், ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி தாலுகா பனப்பாக்கத்தில் 1,231 ஏக்கர் பரப்பளவில் புதிய சிப்காட் தொழிற்பேட்டை உருவாக் கப்பட்டுள்ளது.

டாடா மோட்டார்ஸ் குழுமம், 5 ஆண்டுகளில், ரூ.9,000 கோடி முதலீட்டில் 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் ஜாகுவார் லேண்ட் ரோவர் கார் வாகன உற்பத்தி தொழிற்சாலை அமைக்கவுள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்த 2024ம் ஆண்டு மார்ச் மாதம் மேற்கொள்ளப்பட்டது. இந்த தொழிற்சாலைக்கு கடந்த 2024ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.இந்த தொழிற்சாலை டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனத்தால் அமைக்கப்பட்டு வருகிறது.

ராணிப்பேட்டை மாவட்டம், பணப்பாக்கம் பகுதியில் SIPCOT தொழிற்சாலை வளாகத்தில் அமைந்துள்ளது.முதற்கட்டத்தில் 914 கோடி ரூபாய் அளவில் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டது. மொத்தம் 470 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு சுமார் 2 லட்சம் கார்கள் உற்பத்தி செய்யும் அளவு திறன் கொண்ட இந்த தொழிற்சாலையில், முதல் கட்டமாக ரேஞ்ச் ரோவர் எவோக் கார் உற்பத்தி செய்யப்படவுள்ளது.

அந்த நிறுவனத்தின் கட்டுமான பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், தொழிற்சாலையை இன்று (திங்கட்கிழமை) முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.முதற்கட்டத்தில் ஆண்டுக்கு சுமார் 30,000 வாகனங்களும், அடுத்த 5-7 ஆண்டுகளில் படிப்படியாக உற்பத்தியை அதிகரித்து 2.5 லட்சம் வாகனங்கள் வரை உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 5ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com