முதலமைச்சர் ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல்.. ஓய்வு எடுக்க அறிவுரை!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
Published on

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல் இருப்பதாக மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று முதல் இருமல் மற்றும் காய்ச்சல் பாதிப்புகள் இருந்த நிலையில், உடனே அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. அதில், அவருக்கு வைரஸ் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து, காய்ச்சல் பாதிப்பை குறைக்க உரிய சிகிச்சை பெறவும், சில நாட்கள் ஓய்வு பெறவும் மருத்துவ அறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் பலருக்கு சளி, காய்ச்சல் பரவி வரும் நிலையில், முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பருவமழை தொடங்குவதற்கு முன்பில் இருந்தே தமிழ்நாட்டில் காய்ச்சல் பாதிப்பு என்பது மிகவும் பரவலாக உள்ளது. இதன் காரணமாகவே மாநிலம் முழுவதும் ஒவ்வொரு வாரமும் ஆயிரம் மருத்துவ முகாம்கள் அரசு சார்பில் நடத்தப்பட்டு வருகின்றன. அங்கு காய்ச்சல் தொடர்பான மழைக்கால பாதிப்புகள் தொடர்பாக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உரிய சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

முதலமைச்சர் ஸ்டாலின் அரசின் நலத்திட்டங்களை தொடங்கி வைப்பது, ஆலோசனைக் கூட்டங்களை நடத்துவது, ஆய்வுப் பணிகளை மேற்கொள்வது என தொடர்ந்து பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி, இன்று காலை சென்னை பெசன்ட் நகரில் ஹெல்த் வாக் என்ற அரசின் புதிய திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடக்கி வைப்பார் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இன்று இந்த திட்டத்தை அமைச்சர் உதயநிதி தொடக்கி வைத்தார். முதலமைச்சர் ஸ்டாலினுக்கு உடல்நலன் சரியில்லாத காரணத்தினாலேயே இந்த நிகழ்ச்சியில் அவர் பங்கேற்கவில்லை என கூறப்பட்ட நிலையில், தற்போது அது உறுதியாகி உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com