சீரமைக்கப்பட்ட சமத்துவபுரங்களை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

சீரமைக்கப்பட்ட சமத்துவபுரங்களை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
Published on

மிழக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சார்பில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் புதிதாகக் கட்டப்பட்ட மற்றும் புதிதாக சீரமைக்கப்பட்ட சமத்துவபுரம், பூமாலை வணிக வளாகங்கள், புதிய ஊராட்சி மன்றக் கட்டடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து திறந்து வைத்து இருக்கிறார்.

அதன்படி, திருவள்ளூர், திருச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் 3.12 கோடி ரூபாய் செலவில் பெரியார் நினைவு சமத்துவபுரம் திறக்கப்பட்டு இருக்கிறது. நெல்லை, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, நாமக்கல், கடலூர், திருப்பூர், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் 34 கோடி ரூபாய் செலவில் ஊராட்சி மன்றக் கட்டடங்கள் திறக்கப்பட்டு உள்ளன.

மேலும், தமிழக மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் பயன்பெறும் வகையில் 26 மாவட்டங்களில் 5.16 கோடி ரூபாய் செலவில் பூமாலை வணிக வளாகங்கள் திறக்கப்பட்டு இருக்கின்றன. ‘வாழ்ந்து காட்டுவோம்’ எனும் திட்டத்தின் கீழ் 50 கோடி ரூபாய் செலவில் நுண் தொழில் திட்டம் துவங்கப்பட்டு இருக்கிறது. இந்த நிகழ்வில் பனை மரங்களின் நலன்கள் பற்றிய புத்தகம் வெளியிடப்பட்டு உள்ளது. விவசாயம் காப்பதற்காக விவசாயிகள் தங்கள் மண் வளம் பற்றியும் அதன் தன்மை பற்றியும் எளிதாக அறிவதற்காக, ‘தமிழ் மண் வளம்’ எனும் இணையதளம் ஒன்று இன்று துவங்கப்பட்டு இருக்கிறது.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின்,  ஐ.பெரியசாமி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு ஆகியோர் கலந்துகொண்டனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com