ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்திக்க உள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்திக்க உள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
Published on

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை ஜனாதிபதி திரவுபதி முர்முவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்துப் பேசுவார் என தெரியவந்துள்ளது. அவர்கள் சந்திப்பு எப்போது நடைபெறும் என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று இரவு 10.30 மணிக்கு ஏர் இந்தியா விமானம் மூலம் டெல்லி செல்கிறார்

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னை, கிண்டியில் உள்ள கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

இம்மருத்துவமனையின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை இரவு (27.4.2023) சென்னையிலிருந்து புதுதில்லி புறப்பட்டுச் சென்று, நாளை மறுநாள் (28.4.2023) குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை சந்தித்து, கலைஞர் நூற்றாண்டையொட்டி சென்னை, கிண்டியில் உள்ள கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் 230 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 1000 படுக்கைகளுடன் கூடிய பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையை திறந்து வைத்திட அழைப்பு விடுக்கிறார்.

ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் பல்வேறு விஷயங்களை முதல்வர் ஸ்டாலின் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் நீட் தேர்வை தடைசெய்ய வேண்டும் என்று விலக்கு கோரி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதற்கு ஜனாதிபதி ஒப்புதல் வழங்கவேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்துவார் என்று கூறப்படுகிறது.

சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்குவதற்கு கால நிர்ணயம் செய்யவேண்டும் என சமீபத்தில் தமிழக சட்டசபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இது தொடர்பாகவும் ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விவாதிப்பார் என தகவல் வெளியாகி உள்ளது.

முதல்வர் மு.க.ஸ்டாலின்
முதல்வர் மு.க.ஸ்டாலின்

ஜூன் 3-ம் தேதி கருணாநிதி பிறந்த தின நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள் தொடங்குகிறது. அன்றைய தினம் சென்னை கிண்டி கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் கட்டப்பட்டுள்ள பிரமாண்ட மான பல்நோக்கு மருத்துவமனை திறக்கப்பட உள்ளது. அதுபோல மதுரையில் பிரமாண்டமாக கட்டப்பட்டு உள்ள நூலகமும் திறக்கப்பட உள்ளது. இந்த மருத்துவமனைக்கும், நூலகத்துக்கும் கருணாநிதியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இவற்றை திறந்து வைப்பதற்கு ஜனாதிபதி திரவுபதி முர்முவை முதல்வர் ஸ்டாலின் நேரில் அழைப்பார் என்று கூறப்படுகிறது.

நாளை டெல்லியில் சில கட்சிகளின் தலைவர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்துப் பேச வாய்ப்பு இருப்பதாக முதலில் தகவல் வெளியானது. ஆனால் அவை உறுதிப்படுத்தப்படவில்லை. ஜனாதிபதியை சந்தித்து நாளை இரவே முதல்வர் ஸ்டாலின் சென்னை திரும்ப உள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com