கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளை தமிழகத்தில் நடத்த அனுமதி!

பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி !
கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளை தமிழகத்தில் நடத்த அனுமதி!
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

மாநில அரசின் கோரிக்கையை ஏற்று தமிழ்நாட்டில் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளை நடத்த அனுமதி வழங்கியதற்காக பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

இந்த முறை தமிழ்நாட்டில் கேலோ இந்தியா போட்டிகளை நடத்த மாநில அரசு அனுமதி கேட்டிருந்தது. இதற்கு பிரதமர் நரேந்திர மோடி ஒப்புதல் அளித்துள்ளார். போட்டிகளுக்கான தேதி இன்னும் இறுதி செய்யப்படாத நிலையில், செஸ் ஒலிம்பியாட் போல கேலோ இந்தியா போட்டிகளை சிறப்பாக நடத்த இருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

44- ஆவது செஸ் ஒலிம்பியாட் மிக சிறப்பாக நடைபெற்றது போல, கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளையும் தமிழ்நாடு மிக விமரிசையாக நடத்தி, தமிழ் பண்பாட்டையும் விருந்தோம்பலையும் பறைசாற்றும் என தெரிவித்துள்ளார். தங்களது திறமைகளை விளையாட்டு வீரர்கள் வெளிபடுத்த கேலோ இந்தியா நிகழ்வு தளமாக அமையும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளனர்.

இளம் விளையாட்டு வீரர்களை ஒலிம்பிக் உள்ளிட்ட சர்வதேச போட்டிகளுக்கு தயார்படுத்துவதற்காக கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்த போட்டிகளில் வெற்றி பெறும் இளம் வீரர்கள் தேசிய அளவிலான போட்டிகளுக்கு தகுதி பெற வாய்ப்பு கிடைக்கும் .

தமிழகத்தில் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை நடத்த வேண்டும் என பிரதமரை சந்தித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை வைத்திருந்த நிலையில் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

logo
Kalki Online
kalkionline.com