புதுச்சேரி பட்ஜட்-ல் பெண்களுக்கான நலத்திட்டங்கள் ! முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு!

புதுச்சேரி பட்ஜட்-ல்  பெண்களுக்கான நலத்திட்டங்கள் ! முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு!

புதுச்சேரியில் அனைத்து பெண்களுக்கும் பேருந்தில் பயணிக்க இலவசம் என அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி அரசு ஏற்கனவே அரசு பேருந்துகளில் ஆதிதிராவிட பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என்று அறிவிப்பை வெளியிட்டது

புதுச்சேரியில் பட்ஜெட் மீதான விவாதத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் பேசியதை தொடர்ந்து முதலமைச்சர் ரங்கசாமி இன்று பதில் அளித்தார். சட்டமன்ற உறுப்பினர்கள் கோரிக்கையை தொடர்ந்து இனி தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் இனி அனைத்து அரசு பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்த முதல்வர் ரங்கசாமி பட்டியலினப் பெண்கள் அரசு பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என அறிவிப்பு வெளியிட்டார். அதற்கு பட்டியலின் அமைப்புகள் சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. பேருந்தில் பயணிப்பவர்கள் பட்டியலினப் பெண்கள் என தனிமைப்படுத்தப்படுவது நவீன தீண்டாமையை அரசு கடைபிடிப்பதாக அமையும் என அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனை அனைத்து மகளிர்க்கும் நீட்டிக்க வேண்டும் என்று சட்டமன்ற உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டதால் அனைத்து மகளிரும் அரசு பேருந்துகளில் இனி இலவசமாக பயணிக்கலாம் என அறிவித்தார். முதலமைச்சர் ரங்கசாமியின் இந்த அறிவிப்பு பொது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

புதுச்சேரி சட்டப்பேரவையில் விதவை உதவித்தொகை ரூ.2,500-லிருந்து ரூ.3,000 ஆக உயர்த்தியும், பருவம் தவறிய மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.7,500 இழப்பீடும் வழங்கப்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.

மேலும் பட்ஜெட்டில் பல்வேறு சிறப்புத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. அந்த வகையில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் சிலிண்டருக்கு மாதம் 300 ரூபாய் மானியம் வழங்கப்படும். முதலமைச்சர் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் குழந்தை பிறந்தவுடன் 50,000 ரூபாய் நிரந்தர வைப்பு நிதி வழங்கப்படும் உள்ளிட்ட அறிவிப்புகள் வரவேற்பு பெற்று வருகின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com