புதுவை சட்டசபையில் முதலமைச்சர் ரங்கசாமி மீனவர்களுக்கான டீசல் மானியம் உயர்த்தப்படும் என அறிவித்தார்.
இதன்படி மீனவர்களுக்கு டீசல் மானியம் தெடர்பான புதிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளது. இனி லிட்டருக்கு ரூ.12-க்கு மிகாமல் மானியம் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுவை மாநிலத்தில் மீனவர்கள் போராட்டம் நடத்தி டீசல் மானியத்தை உயர்த்த வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
புதுவை மாநிலத்தில் மீனவர்களுக்கு மானிய விலையில் 2009 முதல் டீசல் வழங்கப்படுகிறது. கூட்டுறவு சம்மேளனத்தின் அங்கீ கரிக்கப்பட்ட நுகர்வோர் பெட்ரோல் பங்குகளில் மீனவர்கள் டீசல் வாங்கினால் மானியம் கிடைத்தது.
இங்கு ரூ.10 வரை குறைந்த விலையில் டீசல் வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு பெட்ரோல், டீசல் மீதான கலால்வரியை அரசு குறைத்தது. இதனால் மீனவர்களுக்கு கிடைக்கும் டீசல் மானியம் மிகவும் குறைந்து ரூ.4 மட்டுமே மானியமாக கிடைத்தது.
இதனால் மீனவர்கள் போராட்டம் ந டத்தி டீசல் மானியத்தை உயர்த்த வேண்டும் என கோரிக்கை வைத்ததையடுத்து சட்டசபையில் முதலமைச்சர் ரங்கசாமி, டீசல் மானியம் உயர்த்தப்படும் என அறிவித்துள்ளார்.
தற்போது டீசலுக்காக புதுவை, காரைக்கால் பிராந்தியங்களில் 8.65 சதவீதம், ஏனாமில் 8.91 சதவீதம், மாகியில் 6.91 சதவீதம் வாட் வரி விதிக்கப்படுகிறது. மீனவர்கள் நுகர்வோர் பங்குகளில் டீசல் வாங்கும்போதே வாட் வரி ரூ.6.87 கழிக்கப்படும். மீதமுள்ள ரூ.5.13 3 மாதம் ஒருமுறை கணக்கிடப்பட்டு மீனவர்கள் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.
இந்த நடைமுறை இந்த மாதம் முதல் அமலுக்கு வருகிறது. இதனால் ஆண்டுக்கு வாட் வரி சலுகையாக ரூ.13.67 கோடியும், திரும்ப செலுத்தும் மானியமாக ரூ.10.35 கோடி என மொத்தம் ரூ.24 கோடி அரசுக்கு செலவாகும். இந்த அறிவிப்பு மீனவர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
யாருக்கு எவ்வளவு மானியம் ஆழ்கடலில் பல நாட்கள் தங்கி மீன்பிடிக்கும் விசைப்ப டகுக்கு நாள்தோறும் 300 லிட்டர் வீதம் ஆண்டுக்கு 40 ஆயிரம் லிட்டர், தினசரி மீன் பிடிக்கும் விசை படகுக்கு நாள் ஒன்றுக்கு 150 லிட்டர் வீதம் ஆண்டுக்கு 36 ஆயிரம் லிட்டர் வரை மானியம் பெறலாம்.
எப்.ஆர்.பி படகுக்கு நாள்தோறும் 20 லிட்டர் வீதம் ஆண்டுக்கு 6 ஆயிரம் லிட்டர், ஓ.பி.எம், ஐ.ஐ.பி.எம். பொருத்திய கட்டு மரங்களுக்கு தினசரி 15 லிட்டர்வீதம் ஆண்டுக்கு 4 ஆயிரம் லிட்டர் வரை மானியத்தில் டீசல் பெறலாம்.