அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்த அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை!

அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்த அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை!
Published on

தினசரி அவசியத் தேவையான காய்கறிகளின் விலை கடந்த சில தினங்களாக நாடு முழுவதும் உயர்ந்து காணப்படுகிறது. தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தக்காளியின் விலையும் சின்ன வெங்காயத்தின் விலையும் ஏற்கெனவே விற்றதை விட பல மடங்கு அதிகரித்துக் காணப்படுகிறது. இது மட்டுமின்றி, உருளைக்கிழங்கு, பச்சை மிளகாய், இஞ்சி மற்றும் பீன்ஸ் போன்றவற்றின் விலையும் கணிசமான அளவுக்கு உயர்ந்து இருக்கிறது. இந்த நிலையில், மக்களின் அன்றாடத் தேவையான அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்துவது குறித்து இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

இந்தக் கூட்டத்தில், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்துவது சம்பந்தமாக அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சில அறிவுறுத்தல்களை வழங்கி இருக்கிறார். அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகளிலும் தக்காளி, சின்ன வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளை விற்பனை செய்து குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவைப்பட்டால் தமிழ்நாடு உணவுப்பொருள் வாணிபக் கழகத்தின் மூலம் அத்தியாவசியப் பொருட்களை கொள்முதல் செய்யலாம். மேலும், தமிழ்நாடு முழுவதும் உழவர் சந்தைகளில் காய்கறி விற்பனையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கலாம்.

கொரோனா காலத்தில் மேற்கொள்ளப்பட்டதுபோல, பொதுமக்களின் வீடு தேடிச் சென்று காய்கறிகளை விற்பனை செய்யும் நடமாடும் காய்கறி கடைகளுக்கு அனுமதி அளிப்பது. மேலும், அத்தியாவசியப் பெருட்கள் பதுக்கப்படுவதைக் கண்காணித்து, அதன் பேரில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்து பல்வேறு ஆலோசனைகளை முதல்வர் ஸ்டாலின் அதிகாரிகளுக்கு ஆலோசனைகளாக வழங்கி இருக்கிறார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com