
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில் சென்னை, வேளச்சேரியில், ரூ.78.49 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள வேளச்சேரி மேம்பாலத்தின் வேளச்சேரி புறவழிச்சாலை-வேளச்சேரி-தாம்பரம் சாலை பாலப்பகுதியையும், செங்கல்பட்டு மாவட்டம், பெருங்களத்தூரில், ரூ.37 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள பெருங்களத்தூர் ரெயில்வே மேம்பாலத்தின் செங்கல்பட்டு சென்னை வழித்தடப் பாலப்பகுதியையும் காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.
இப்பாலம் திறக்கப்பட்டுள்ளதால், வேளச்சேரி பகுதியில் போக்குவரத்து நெரிசல் குறையும். பள்ளிக்கு செல்லும் மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் பயண நேரம் பெருமளவு குறையும் என பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர்.