கொசு வலை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்!

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

"அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் மழை முன்னெச்சுரிக்கை பணிகளை பொதுமக்கள் பாராட்டுகின்றனர், என முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

சென்னையில், திரு.வி.க.நகர் மற்றும் கொளத்துார் சட்ட சபை தொகுதிகளுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் மேற் கொள்ளப்பட்டு வரும் மழை முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு பணிகளை, முதல்வர் ஸ்டாலின் நேற்று காலை ஆய்வு செய்தார்.

அவருடன் அமைச்சர்கள் நேரு, சேகர் பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, கமிஷனர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோர் இருந்தனர்.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஏழை, எளியவருக்கு, கொசு வலை வழங்கும் திட்டத்தை, திரு.வி.க., நகர் மண்டல அலுவலகத்தில் முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்து, கொசு வலைகள் வழங்கினார்.

அதை தொடர்ந்து, ஓட்டேரி நல்லா கால்வாயில், மழை வெள்ளம் தடையின்றி செல்லும் வகையில் மேற்கொள்ளப்பட்ட பணி, ஸ்டீபன்சன் சாலையில் மழை நீர் அகற்றும் பணி, வீனஸ் நகரில், கழிவு நீரகற்று நிலையத்தின் செயல்பாடு உள்ளிட்டபல்வேறு, மழை வெள்ள பாதிப்பு மற்றும் நிவாரண பணிகளை ஆய்வு செய்தார்.

பின் முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது; பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையை, தமிழக அரசு முழு வீச்சில் செய்து வருகிறது.

அனைத்து அரசு துறைகளும் ஒருங்கிணைந்து சிறப்பாக பணிகளை செய்து வருகின்றன. அரசால் மேற்கொள்ளப்படும் பணிகளை எதிர்க்கட்சிகள் தான் விமர்சனம் செய்கின்றன.

அவர்களின் விமர்சனங்களை கடந்து, மக்களின் பாராட்டு அரசுக்கு கிடைத்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. இதனிடையே, மழையால் அதிகம் பாதிக்கப்பட் டுள்ள மயிலாடுதுறை, கடலுார் மாவட்டங்களை முதல்வர் இன்று பார்வையிட உள்ளார்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com