தமிழ்நாடு முழுவதும் கட்டப்பட்டுள்ள கல்விசார் கட்டடங்களை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

தமிழ்நாடு முழுவதும் கட்டப்பட்டுள்ள கல்விசார் கட்டடங்களை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
Published on

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (20.01.2023) தலைமைச் செயலகத்தில், உயர்கல்வித் துறை சார்பில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரி, அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றில் 202 கோடியே 7 இலட்சத்து 77 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைக் கட்டடங்கள், ஆய்வகங்கள், கருத்தரங்கு கூடம், விடுதிகள், மின்னணு நூலகங்கள் உள்ளிட்ட பல்வேறு கட்டடங்களை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

 இதுகுறித்து  தமிழகஅரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 

தமிழ்நாட்டில் உயர்கல்வியை மேம்படுத்தும் நோக்கில், அதிக எண்ணிக்கையிலான உயர்கல்வி நிறுவனங்களை தொடங்குதல், அதன் வாயிலாக ஆராய்ச்சி, புதுமைப்படைப்புகள், தொழில்நுட்ப வளர்ச்சி ஆகியவற்றில் மாணவர்களின் திறன்களை வளர்த்து, வேலைவாய்ப்பினை உறுதி செய்தல், உலகளாவிய தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக தகுதிவாய்ந்த திறன்மிகு இளைஞர்களை உருவாக்குதல் போன்ற பல்வேறு முன்னெடுப்புகளை நான் முதல்வன் என்ற திட்டத்தின்கீழ் எடுத்து வருவதுடன், அரசுப் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை படித்த மாணவிகள் உயர் கல்வியை பயில்வதற்கு, புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1000/- உதவித் தொகை வழங்கப்படுகிறது. மேலும், முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு சலுகைகள், பொருளாதாரத்தில் நலியுற்ற மாணாக்கர்களுக்கு நிதியுதவி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருவதால் அகில இந்திய அளவில் உயர்கல்வி சேர்க்கையில் தமிழ்நாடு முதலிடம் வகித்து வருகிறது.

அந்த வகையில், சென்னை-மாநிலக் கல்லூரியில் 8 கோடியே 21 இலட்சத்து 52 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாணவியர்களுக்கான கூடுதல் விடுதிக் கட்டடம்; சென்னை-பாரதி மகளிர் கலைக் கல்லூரியில் 2 கோடியே 25 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 12 கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள்; சென்னை-இராணிமேரி கல்லூரியில் 1 கோடியே 9௦ இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 10 வகுப்பறைகள்

மற்றும் 2 கழிவறை தொகுதி கட்டடங்கள்; சென்னை-ஆர்.கே.நகர், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2 கோடியே 6௦ இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 13 வகுப்பறைகள், 1 ஆய்வகம் மற்றும் 3 கழிவறை கட்டடங்கள்; வியாசர்பாடி-டாக்டர் அம்பேத்கார் அரசு கலைக் கல்லூரியில் 90 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பல்நோக்கு அரங்கம்;

திருவள்ளுர் மாவட்டம் – செவ்வாய்பேட்டை அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிக்கு 23 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கல்விசார் கட்டடம்; பொன்னேரி-உலகநாத நாராயணசாமி அரசு கலைக் கல்லூரியில் 11 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 36 வகுப்பறைகள், 8 ஆய்வகங்கள் மற்றும் 6 கழிவறை தொகுதி கட்டடங்கள்;

விழுப்புரம், அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 4 கோடியே 56 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 24 வகுப்பறைகள் மற்றும் கழிவறை கட்டடங்கள்; திருவண்ணாமலை மாவட்டம்-செய்யாறு, அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மின்னணு நூலகக் கட்டடம்;

வேலூர், தந்தை பெரியார் அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் 77 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 2 வகுப்பறைகள், 2 ஆய்வகங்கள், 1 ஆசிரியர் அறை மற்றும் 1 கழிவறை கட்டடம்; சேர்க்காடு – திருவள்ளுவர் பல்கலைக்கழக வளாகத்தில் 20௦ கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாணவர் மற்றும் மாணவியர் விடுதிக் கட்டடங்கள்;

திருப்பூர் மாவட்டம், காங்கேயம்-அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2 கோடியே 30 இலட்சத்து 65 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 9 வகுப்பறைகள், 1 ஆய்வகம் மற்றும் கழிவறை கட்டடம்; திருப்பூர் – சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் 1 கோடியே 86 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 8 கூடுதல் வகுப்பறைகள், 1 ஆய்வகம், 2 பணியாளர் அறைகள் மற்றும் 2 கழிவறை கட்டடங்கள்; திருப்பூர் -எல்.ஆர்.ஜி

அரசு மகளிர் கலைக் கல்லூரியில் 3 கோடியே 74 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 14 கூடுதல் வகுப்பறைகள், 3 ஆய்வகங்கள் மற்றும் 6 கழிவறை கட்டடங்கள்; உடுமலைப்பேட்டை-அரசு கலைக் கல்லூரியில் 1 கோடியே 52 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 8 வகுப்பறைகள் மற்றும் கழிவறை கட்டடங்கள்;

கோயம்புத்தூர் – அரசு கலைக் கல்லூரியில் 7 கோடியே 5௦ இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 40 வகுப்பறைகள் மற்றும் 6 கழிவறை கட்டடங்கள்;

நீலகிரி மாவட்டம், உதகமண்டலம்-அரசு கலைக் கல்லூரியில் 1 கோடியே 54 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 4 வகுப்பறைகள், 1 ஆய்வகம் மற்றும் 2 கழிவறை கட்டடங்கள்; ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம்-அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 1 கோடியே 92 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 9 வகுப்பறைகள் மற்றும் 4 கழிவறை கட்டடங்கள்;

சேலம், பெரியார் பல்கலைக்கழகத்தில் 6 கோடியே 93 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள திறன் வளர்ச்சி, தொழில் முனைவோர் மற்றும் அடைக்காப்பு மையம் ஆகியவற்றிற்கான கூடுதல் விரிவாக்க கட்டடங்கள்; ஆத்தூர், அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 3 கோடியே 80 இலட்சம்

ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 20 கூடுதல் வகுப்பறைகள் மற்றும் கழிவறை கட்டடங்கள்;

நாமக்கல் மாவட்டம், மோகனூர்-அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிக்கு 20 கோடியே 57 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கல்விசார் கட்டடம்;  ராசிபுரம்-திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரியில் 1 கோடியே 14 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 6 கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள்;

கரூர் மாவட்டம், காணியாளம்பட்டி-அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில் 2 கோடியே 26 இலட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 2 வகுப்பறைகள் மற்றும் 8 ஆய்வகக் கட்டடங்கள்; குளித்தலை- அரசு கலைக் கல்லூரியில் 5 கோடியே 5 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 2௦ கூடுதல் வகுப்பறைகள் மற்றும் 3 ஆய்வகக் கட்டடங்கள்;

புதுக்கோட்டை – மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரியில் 4 கோடியே 80 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 22 வகுப்பறைகள், 1 நவீன வகுப்பறை மற்றும் 2 ஆய்வகக் கட்டடங்கள்; கடலூர் – பெரியார் அரசு கலைக் கல்லூரியில் 6 கோடியே 8 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 32 கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள்;

திருவாரூர் – திரு.வி.க அரசு கலைக் கல்லூரியில் 2 கோடியே 24 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 12 கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள்; மன்னார்குடி-மன்னை இராஜகோபாலசாமி அரசு கலைக் கல்லூரியில் 2 கோடியே 24 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 12 கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள்;

தஞ்சாவூர், குந்தவை நாச்சியார் அரசினர் மகளிர் கலைக் கல்லூரியில் 3 கோடியே 32 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 2௦ கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள்; தஞ்சாவூர், மன்னர் சரபோஜி அரசு கல்லூரியில் 2 கோடியே 16 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 12 கூடுதல் வகுப்பறைகள் மற்றும் கழிவறை தொகுதி கட்டடங்கள்; ஒரத்தநாடு, அரசு கலைக் கல்லூரியில் 3 கோடியே 64 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 20 கூடுதல் வகுப்பறைகள் மற்றும் கழிவறை தொகுதி கட்டடங்கள்;

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல்-அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் 21 கோடியே 98 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 10 வகுப்பறைகள், கருத்தரங்கு கூடம், பொது கருவியாக்கல் ஆய்வகம், கழிவறை தொகுதிகள் மற்றும் சுற்றுச்சுவர்; திண்டுக்கல் – எம்.வி.முத்தையா அரசு மகளிர் கலைக் கல்லூரியில் 4 கோடியே 5௦ இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 24 கூடுதல் வகுப்பறைகள் மற்றும் 6 கழிவறை தொகுதிக் கட்டடங்கள்;

சிவகங்கை மாவட்டம் – பூலாங்குறிச்சி, வ.செ.சிவலிங்கம் அரசினர் கலைக் கல்லூரியில் 3 கோடியே 45 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 12 கூடுதல் வகுப்பறைகள், மின்னணு நூலகம், 2 பணியாளர் அறைகள், 4 கழிவறை தொகுதிகள் மற்றும் இதரக் கட்டடங்கள்; சிவகங்கை-அரசு மகளிர் கலைக் கல்லூரியில் 3 கோடியே 4 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 16 கூடுதல் வகுப்பறைகள் மற்றும் 5 கழிவறை தொகுதி கட்டடங்கள்; மதுரை, தமிழ்நாடு அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் 50 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 2 கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள்;

திருநெல்வேலி – மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் 1 கோடியே 42 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள விருந்தினர் மாளிகை உள்ளிட்ட அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரி, அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் 202.07 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கல்விசார் கட்டடங்களை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, தலைமைச் செயலாளர் இறையன்பு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com