ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை சந்திக்கும் முதல்வர் ஸ்டாலின்!

ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை சந்திக்கும் முதல்வர் ஸ்டாலின்!

தமிழக மின்சாரத்துறை மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இரண்டிலிருந்து 3 நாட்கள் வரை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சிகிச்சை தேவை என ஓமந்தூரார் மருத்துவமனை அறிவித்துள்ளது. ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். சுமார் 12 மணி நேர சோதனைக்குப்பின் விசாரணைக்கு அழைத்துச் செல்ல முயன்ற போது அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதாக தெரிகிறது.

அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணைக்காக செந்தில் பாலாஜியை அழைத்துச் செல்ல முயன்றபோது, அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உயர் ரத்த அழுத்தம், நெஞ்சு வலி காரணமாக அவர் மருத்துவமனையில அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதன் பின் ஐசியூ-வில் சிகிச்சை பெற்று வரும் அவருக்கு ஈசிஜி இயல்பாக இல்லை எனத் தகவல் வெளியானது. காலை 9 மணிக்குப் பிறகு தான் உடல்நிலை குறித்து தெரிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் ஓமந்தூரார் மருத்துவமனை தரப்பில் அவரது உடல்நிலை குறித்து தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் ''அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடலநிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து மயக்க நிலையிலேயே உள்ளார். இதயத்துடிப்பு, உடலில் ஆக்சிஜன் சமநிலை கண்காணிக்கப் பட்டு வருகிறது. இரண்டிலிருந்து 3 நாட்கள் வரை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சிகிச்சை தேவைப்படுகிறது. சீரான இதயத் துடிப்பு இல்லாத நிலையில் தேவைப்பட்டால் ஆஞ்சியோ சிகிச்சை அளிக்க வேண்டியிருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com