முதல்வர் ஸ்டாலின் இன்றிரவு ட்விட்டர் ஸ்பேஸில் உரை!

Chief Minister Stalin
Chief Minister Stalin

மிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்றிரவு  8 மணிக்கு ட்விட்டர் ஸ்பேஸில் (Twitter Space) உரையாற்றவுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

-இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்ததாவது:

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் இன்றிரவு 8 மணிக்கு திமுக தொழில் நுட்ப பிரிவு சார்பாக ட்விட்டர் ஸ்பேசில் உரையாற்ற உள்ளார். இந்த செப்டம்பர் மாத்தில்தான் பெரியார் மற்றும் அண்ணா ஆகியோர் பிறந்தனர் என்பதாலும், இதே மாதத்தில்தான் திமுக தொடங்கப் பட்டதாலும் செப்டம்பர் மாதத்தை திராவிட மாதம் என்று கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்த வகையில் ட்விட்டர் ஸ்பேஸில் ‘திராவிடத்தை கொண்டாடுவோம்’ என்ற நிகழ்ச்சி நடத்தப் பட்டு வருகிறது. இந்நிலையில், இன்றுடன் செப்டம்பர் மாதம் நிறைவடைவதால் முதல்வர் ஸ்டாலின் இன்றிரவு 8 மனிக்கு  ட்விட்டர் ஸ்பேஸில் உரையாற்ற்வுள்ளார்.

-இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com