

கூட்டுறவு வங்கிகள் மூலம் ₹50,000 வரை பயிர் கடன் பெற்ற குறு விவசாயிகளின் கடன் தள்ளுபடி என முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.
சிறு குறு விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளின் மூலம் பெற்ற ரூ.50,000 வரையிலான பயிர்கடனை தள்ளுபடி செய்து முதலமைச்சர் விஜய் உத்தரவு. பயிர்கடன் தள்ளுபடி மூலம் அரசுக்கு ரூ.2,044.46 கோடி கூடுதல் செலவினம். இந்த தள்ளுபடி மூலம் 14.22 லட்சம் விவசாயிகள் பயனடைவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
01.05.2025 முதல் 28.02.2026 வரை கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க்கடன்களுக்கு இந்தத் தள்ளுபடி பொருந்தும்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கூட்டுறவு வங்கிகளில் குறு விவசாயிகள் ரூ. 50,000 கடன் பெற்றிருந்தால், முழுவதுமாக தள்ளுபடி செய்யப்படும். சிறு விவசாயிகளுக்கு 50% (ரூ. 25,000) தள்ளுபடி செய்யப்படும்.
ரூ. 50,001 - ரூ.60,000 வரை கடன் பெற்றிருந்தால்,
குறு விவசாயிகளுக்கு ரூ. 40,000 தள்ளுபடி
. சிறு விவசாயிகளுக்கு ரூ. 20.000 தள்ளுபடி.
ரூ. 60,001 -ரூ.70,000 வரை கடன் பெற்றிருந்தால்,
குறு விவசாயிகளுக்கு ரூ. 30,000 தள்ளுபடி
. சிறு விவசாயிகளுக்கு ரூ. 15,000தள்ளுபடி.
ரூ.70,001-ரூ.80,000 வரை கடன் பெற்றிருந்தால்,
குறு விவசாயிகளுக்கு ரூ. 20,000 தள்ளுபடி
. சிறு விவசாயிகளுக்கு ரூ. 10,000 தள்ளுபடி.
ரூ. 80.001-ரூ. 90,000 வரை கடன் பெற்றிருந்தால்,
குறு விவசாயிகளுக்கு ரூ. 10,000 தள்ளுபடி
. சிறு விவசாயிகளுக்கு ரூ. 5,000 தள்ளுபடி.
ரூ.90,001- ரூ. 1,00,000 வரை கடன் பெற்றிருந்தால்,
குறு விவசாயிகளுக்கு ரூ. 10,000 தள்ளுபடி .
. சிறு விவசாயிகளுக்கு ரூ. 5,000 தள்ளுபடி.
ரூ. 1 லட்சத்துக்கு மேல் கடன் பெற்றிருந்தால்,
குறு விவசாயிகளுக்கு ரூ. 5,000 தள்ளுபடி
. சிறு விவசாயிகளுக்கு ரூ. 5,000 தள்ளுபடி.
மேலும், கூட்டுறவு வங்கிகள் மூலம் பயிர்க்கடன் பெற்ற இதர பெரு விவசாயிகளுக்கு தலா ரூ.5,000 பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும்.
இந்தப் பயிர்க்கடன் தள்ளுபடி, எதிர்வரும் சாகுபடி பருவத்திற்கு கடன் பெற விரும்பும் விவசாயிகளுக்கு பெருமளவில் பயன்தரும்.
இந்தப் பயிர்க்கடன் தள்ளுபடித் திட்டத்தின் கீழ் 01.05.2025 முதல் 28.02.2026 வரை கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெற்றுள்ள 14,22,555 விவசாயிகள் பயனடைவார்கள். இதனால் அரசுக்கு ரூ.2,044.46 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.