பிரதமர் காரில் ஏற முயன்ற முதல்வர்; தடுத்த பாதுகாப்புப் படை வீரர்கள்!

பிரதமர் மோடி - முதல்வர் பூபேந்திர படேல்
பிரதமர் மோடி - முதல்வர் பூபேந்திர படேல்
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

பிரதமர் மோடியின் காரில் ஏற முயன்ற குஜராத் முதல்வர் பூபேந்திர படேலை தேசிய பாதுகாப்பு படை வீரர் தடுத்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 குஜராத்தில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், அங்கு ஆளுங்கட்சியான பாஜக  மீண்டும் ஆட்சியை பிடிக்க தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது.

பிரதமர் மோடி இதற்காக அடிக்கடி குஜராத் சென்று பல ஆயிரம் கோடிக்கான திட்டங்களை தொடங்கி வைத்து, பிரசாரம் செய்து வருகிறார்.

சமீபத்தில் குஜராத்தில் அவர் 2 நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்டபோது, பிரதமர் மோடியின் காரில் அம்மாநில முதல்வர் பூபேந்திர படேல் ஏற முயன்றார். அவரை தேசிய பாதுகாப்பு படை வீரர் ஒருவர் தடுக்கும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

 ஒரு மாநிலத்தின் முதல்வர் இவ்வாறு பாதுகாப்பு படை வீரரால் அவமதிக்கப்பட்டது இப்போது சர்ச்சையாகி வருகிறது. குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் அவமதிக்கப்பட்டதற்கு காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

logo
Kalki Online
kalkionline.com